கோழி முட்டை இடுவது வழக்கமானது ஆனால் இந்தோனேஷியாவில்  சிறுவன் ஒருவர் இரண்டு ஆண்டுகளாக முட்டை இட்டு வரும் வினோத சம்பவம் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. 


இந்தோனேஷியாவில் கோவா பகுதியை சேர்ந்த  14 வயதான அக்மல் கடந்த இரண்டு ஆண்டுகளாக  முட்டை இடுவதாக கூறி பெற்றோர் வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

சிறுவனை பரிசோதித்த வைத்தியர்கள் மனிதனின் உடலில் முட்டை இருப்பதற்கான வாய்ப்புகள் இல்லை இருப்பினும் இந்த நிகழ்வு குறித்து தெளிவான புரிதல் இல்லாமல் என்ன சிகிச்சை அளிப்பது என்ற குழப்பத்தில் உள்ளனர்.

இது குறித்து சிறுவனது தந்தை, 

"அக்மல் 2 ஆண்டுகளாக முட்டை இடுகிறான். இதுவரை 20 முட்டைகள் இட்டுள்ளான். அந்த முட்டையை உடைத்து பார்த்த போது உள்ளே மஞசல் நிறத்தில் இருந்தது. பல முறை நாங்கள் வைத்தியசாலையில் இதற்காக சிகிச்சைக்கு வந்தோம். ஆனால் பலன் இல்லை" என தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான சிறுவனது எக்ஸ்-ரே ஒன்றும் வெளியாகியுள்ளது.