உணவை உண்­ப­தற்கு பயன்­படும்  குச்­சி­க­ளி­லொன்று  அதன் மீது தவறி விழுந்த பாலகன் ஒரு­வனின் வாயி­னூ­டாக  அவ­னது மூளை வரை துளைத்துச் சென்ற  விப­ரீத சம்­பவம்  சீனாவில் இடம்­பெற்­றுள்­ளது.

கடந்த ஞாயிற்­றுக்­கி­ழமை இரவு இடம்­பெற்ற மேற்­படி சம்­பவம் குறித்து சர்­வ­தேச ஊட­கங்கள்  நேற்று  வியா­ழக்­கி­ழமை செய்­தி­களை  வெளி­யிட்­டுள்­ளன.

ஹுனான் மாகா­ணத்­தி­லுள்ள ஹென்யாங் பிராந்­தி­யத்தைச்  சேர்ந்த  யாங் யாங்  என்ற இரண்டு வயதை எட்­டாத பால­கனே  தனது வீட்டைச் சுற்றி ஓடி விளை­யா­டிய வேளையில்  கால் தடு­மாறி  அங்கு வீசப்­பட்­டி­ருந்த  குச்­சி­யொன்றின்  மீது  விழுந்­துள்ளான். 

இத­னை­ய­டுத்து  செக்கன்ட் ஸயன்­கையா மருத்­து­வ­ம­னைக்கு கொண்டு செல்­லப்­பட்ட   அவ­னுக்கு அங்­குள்ள மருத்­து­வர்கள் பெரும் போராட்­டத்தின் மத்தியில் இர­வோ­டி­ர­வாக துரித சத்­தி­ர­சி­கிச்­ையை மேற்­கொண்டு  குச்­சியை  அகற்­றி­யுள்­ளனர்.

தற்­போது   அந்தப் பால­க­னது உடல் நிலை யில் முன்­னேற்றம் ஏற்­பட்­டுள்ள போதும் அவன் மேலும் பல தினங்­க­ளுக்கு மருத்­து­வர்­களின் கண்­கா­ணிப்பில் இருக்க வேண்­டிய நிலை­யி­லுள்­ள­தாக தெரி­விக்­கப்­ப­டு ­கி­றது.

குழந்­தைகள் உள்ள வீடு­களில் அவர்கள் நட­மாடும் இடங்­களிலுள்ள பொருட்­களால் அவர்­க­ளுக்கு ஏற்­படக்கூடிய உயி­ரா­பத்துக் குறித்து மிகவும் அவ­தா­னத்­துடன் இருக்க வேண்­டிய அவசியம் தொடர்பில்   பெற்றோருக்கு ஒரு எச்சரிக்கையாக மேற் படி சம்பவம்   உள்ளதாக மருத்துவர்கள்  தெரிவிக்கின்றனர்.