அமெ­ரிக்க  வானொலி காலை நேர நிக ழ்ச்­சி ஒன்றின் பெண் தொகுப்­பாளர்  ஒருவர்,   தனது நிகழ்ச்சி இடம்­பெற்றுக் கொண்­டி­ ருந்த வேளையில்  குழந்­தையை பிர­ச­வித்த சம்­பவம் அமெ­ரிக்­காவில் இடம்­பெற்­றுள்­ளது.

கடந்த செவ்­வாய்க்­கி­ழமை இடம்­பெற்ற மேற்­படி பிர­சவம் குறித்து சர்­வ­தேச ஊட­கங்கள் நேற்று வியா­ழக்­கி­ழமை செய்­தி­களை வெளி­யிட்­டுள்­ளன.

சென்.லூயிஸ் நக­ரி­லுள்ள ஆர்ச் வானொலி நிலை­யத்தில் அறி­விப்­பா­ள­ராக கட­மை­ யாற்­றும் கஸிடே புரொக்டர் என்ற மேற்­படி பெண் கடந்த திங்­கட்­கி­ழமை பிர­ச­வத்­துக்­காக மருத்­து­வ­ம­னையில் அனு­ம­திக்­கப்­பட்­டி­ருந்தார். இந்­நி­லையில் அவர் கட­மை­யாற்­றிய வானொலி நிலை­ய­மா­னது அவர் பிர­சவ காலத்தின் போதும் மருத்துவமனையில் இருந்து பணியைத் தொடர ஏற்பாடு செய்திருந்தது. 

இந்நிலையில்  நிகழ்ச்சித் தொகுப்பை மேற்­கொண்­டி­ருந்த  வேளையில்  பிர­சவ வலிக்கு உள்­ளான   கஸ்டே புரொக்டர்,   தனது  சொந்தப் பிர­சவம் குறித்து வானொ­லியில்  அறி­விப்புச் செய்தார். தொடர்ந்து அவர் சத்­தி­ர­சி­கிச்சைப் பிரிவில் ஆரோக்­கி­ய­மான குழந்­தை­யொன்றைப் பிர­சவித் தார். அந்தக் குழந்தை உரிய  பிரசவ காலத் திற்கு இரு வாரங்கள் முன்கூட்டியே  பிறந் துள்ளமை குறிப்பிடத்தக்கது.