வலைப்­பந்­தாட்ட பயிற்­சிக்கு  வர மறுத்த  மாண­வியின் கன்­னத்தில்  ஆசி­ரியர் பல­மாக அறைந்­ததால் காதில் இரத்தம் வந்த நிலையில் குறித்த மாணவி கம்­பளை  வைத்­திய சாலையில் அனு­ம­திக்­கப்­பட்­டுள்ளார்.

கொத்­மலை கல்வி வலயத்தில் அமைந்து ள்ள பாட­சா­லை­யொன்­றி­லேயே  நேற்­று­முன்­தினம்  இச்­சம்­பவம் இடம்­பெற்­றுள்­ளது.

இச்­சம்­பவம் தொடர்­பாக மாண­வியின் பெற்றோர் புஸல்­லாவ பொலிஸ் நிலை­யத்தில் முறைப்­பாடு செய்­துள்­ளனர்.

சம்­பவ தினம் தரம் பத்தில் கல்வி கற்று வந்த   குறித்த மாணவி பாட­சா­லை­யை­விட்டு வெளி­யே­றிய வேளை­யில்­வ­லைப்­பந்­தாட்ட பயிற்­று­ விப்­பா­ள­ரான ஆசி­ரியர் குறித்த மாண­வியை பயிற்­சிக்கு வரு­மாறு அழைத்­துள்ளார். இதன்போது மாணவி தனக்கு சுக­யீனம் கார­ண­மாக  இன்று வர முடி­யாது என கூறிய சந்­தர்ப்­பத்­தி­லேயே  மேற்­படி ஆசி­ரியர் மாண­வியின் கன்­னத்தில் பல­மாக அறைந்­த­தாக பொலிஸ் முறைப்­பாட்டில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

இச்­சம்­பவம் தொடர்­பான விசா­ர­ணை­களைபுஸல்­லாவ  பொலிஸார் மேற்­கொண்டு  வரு­கின்­றனர்.