தேசிய ஒலிம்பிக் சங்­கத்­திற்­கான தேர்தல் இன்று மாலை 4 மணிக்கு விளை­யாட்­டுத்­துறை அமைச்சில் விளை­யாட்­டுத்­துறை அமைச்சின் அதி­கா­ரிகள் முன்­னி­லையில் நடை­பெ­ற­வுள்­ளது.

கடந்த ஒன்­பது வரு­டங்­க­ளுக்குப் பிறகு தேசிய ஒலிம்பிக் சங்கத் தேர்தல் நடை­பெ­ற­வுள்­ளதால் சற்று பர­ப­ரப்பு தொற்­றிக்­கொண்­டுள்­ளது.

இம்­முறை தேசிய ஒலிம்பிக் சங்கத் தலைமைப் பொறுப்­பிற்கு சுரேஷ் சுப்­ர­ம­ணி­யமும், ரொஹான் பெர்­னாண்டோவும் போட்­டி­யி­டு­கின்­றனர்.

அத்­தோடு தலை­வரைத் தவ­ிர உப தலை­வர்கள், செய­லாளர், பொரு­ளாளர் என 12 பத­வி­க­ளுக்­கான வாக்­கெ­டுப்பும் நடை­பெ­ற­வுள்­ளது.

சர்­வ­தேச ஒலிம்பிக் சங்­கத்தின் நேரடி கட்­டுப்­பாட்டின் கீழ் இயங்கும் தேசிய ஒலிம்பிக் சங்­கத்தின் தலை­வ­ராக இருந்த ஹேம­சிறி பெர்­னாண்டோ இம்­முறை தேர்­தலில் போட்டியிடவில்லை.

தற்­போ­தைய தேசிய ஒலிம்பிக் சங்­கத்தின் செய­லாளர் நாய­க­மாக செயற்­பட்டு வரும் மெக்ஸ்வெல் டி சில்வா, சுரேஷ் சுப்­ர­ம­ணியம் தலை­மை­யி­லான அணியின் அதே பத­விக்கு போட்­டி­யி­டு­கின்றார்.

சுரேஷ் சுப்­ர­ம­ணியம் இலங்கை டென்னிஸ் சங்­கத்தின் முன்னாள் தலை­வ­ரா­கவும் ஆசிய டென்னிஸ் சங்­கத்தின் செய­லா­ள­ரா­கவும் செயற்­பட்­டவர்.

அதே­வேளை சுரேஷ் சுப்­ர­ம­ணி­யத்தை எதிர்த்து போட்­டி­யிடும் ரொஹான் பெர்­னாண்டோ பட­கோட்டி விளை­யாட்டு சங்­கத்தின் தலைவராக உள்ளார். அதேவேளை தற்போதையஒலிம்பிக் சங்கத் தின் நிதியி யல் குழு உறுப் பினராகவும் செயற்பட்டு வந்தவர்.

ஒன்பது ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெறவுள்ள இத் தேர்தலில் வாக்களிக்க 31 சங்கங்கள் தகுதிபெற்றுள்ளன. 

ஒலிம்பிக் சங்கத் தேர்தலில் வெற்றியீட்டப்போகும் அணி எது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.