வடக்கின் பிர­பல பாட­சா­லை­க­ளான மகா­ஜனா கல்­லூரி மற்றும் சுன்­னாகம் ஸ்கந்­த­வ­ரோ­தயா கல்­லூரி அணி­க­ளுக்­கி­டை­யி­லான மாபெரும் கிரிக்கெட் சமர் இன்று ஆரம்­ப­மா­க­வுள்­ளது.

இன்று ஆரம்­ப­மா­கும் இப்­போட்­டி­யா­னது தெல்­லிப்­பழை மகா­ஜனா கல்­லூரி மைதா­னத்தில் இரு நாட்கள் நடை­பெ­ற­வுள்­ளது.  

கடந்த 2000ஆம் ஆண்டு ஆரம்­பிக்­கப்­பட்ட இவ்­விரு அணி­க­ளுக்­கி­டை­யி­லான கிரிக்கெட் சம­ரா­னது இம்­முறை 18ஆவது முறை­யா­கவும் நடத்­தப்­ப­டு­கின்­றது.

இவ்­விரு அணி­க­ளுக்­கி­டையில் இது­வ­ரை 17 பெரும் சமர் மோதல்கள் இடம்­பெற்­றுள்­ளன. அவற்றில் மகா­ஜனா கல்­லூரி அணி 5 முறையும் ஸ்கந்­த­வ­ரோ­தயா கல்­லூரி 4 முறையும் வெற்­றி­பெற்­றுள்­ளன. 

அதே­வேளை இத் தொடரின் ஏனைய 8 போட்­டிகள் வெற்­றி­தோல்­வி­யின்றி சம­நி­லையில் நிறை­வ­டைந்­துள்­ளன.

கடந்த வருடம் நடை­பெற்ற போட்­டியும் சம­நி­லையில் முடி­வ­டைந்த நிலையில் இத் தொடரில் இறு­தி­யாக வெற்­றி­பெற்ற அணி­யாக மகா­ஜனா கல்­லூரி விளங்­கு­கி­றது. 

இன்று ஆரம்பமாகவுள்ள இப் போட்டித் தொடரில் வெற்றிவாகை சூடப்போவது யார் என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.