காணாமல் ஆக்­கப்­பட்டோர் பணி­யகம் மற்றும் நிலை­மா­று­கால நீதி ஆகி­யன தொடர்­பான வாக்­கு­று­தி­களை  அர­சாங்கம் மதிக்க வேண்டும் என்று ஐரோப்­பிய ஒன்­றியம் வலி­யு­றுத்­தி­யுள்­ளது.

கிளி­நொச்­சியில் காணாமல் ஆக்­கப்­பட்­ட­வர்­களின் உற­வி­னர்கள் நடத்தி வரும் போராட்டம் ஒரு ஆண்டைக் கடந்­துள்ள நிலையில், ஐரோப்­பிய ஒன்­றி­யத்தின்  இலங்கை அலு­வ­லக பணி­யகம்  தனது டுவிட்டர் தளத்தில் இட்­டுள்ள  பதிவு ஒன்­றி­லேயே இதனைத் தெரி­வித்­துள்­ளது.

“காணா­மல்­போன தமது அன்­புக்­கு­ரி­ய­வர்­களைப் பற்­றிய தக­வல்கள் சரி­யாக தெரி­யா­ததால் பல இலங்­கை­யர்கள் தேசிய நல்­லி­ணக்­கத்தில் பங்கு கொள்ள முடி­யா­தி­ருக்கும்.

இலங்கை  அர­சாங்கம் காணாமல் ஆக்­கப்­பட்டோர் பணி­யகம் மற்றும் நிலை­மா­று­கால நீதி ஆகி­யன தொடர்பான தனது கடப்பாட்டை மதிக்க வேண்டும்.” என்று அதில் கூறப்பட்டுள்ளது.