கிளிநொச்சியில் காணாமல் போன இளைஞன் ஒருவர் உயிரிழந்த நிலையில், அவரது சடலம் இன்று புதுமுறிப்புக்குளத்திலிருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளது.

குறித்த சடலம், முச்சக்கர வண்டி உரிமையாளரான கிளிநொச்சி உதயநகர் பகுதியைச் சேர்ந்த பாலசிங்கம் தனுஷன் (25) என்ற இளைஞனுடையதென அடையாளம் காணப்பட்டுள்ளது.

நேற்று மாலை குறித்த இளைஞன் முதல் காணாமல் போயிருந்ததாகவும், உறவினர்கள் அவரை தேடி வந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது. 

இந்நிலையில், இன்று காலை முறிப்புக் குளத்தில் சடலமொன்று மிதப்பதாக பொதுமக்கள் வழங்கிய தகவலைத் தொடர்ந்து பொலிஸார் அதனை கரைக்குக் கொண்டுவந்துள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.