முல்லைத்தீவு, முள்ளிவாய்க்கால் கோத்தபாய கடற்படை முகாம் அமைந்துள்ள பொது மக்களுக்குச் சொந்தமான காணிகளை அளவீடு செய்வதற்கு எதிர்ப்புத் தெரிவித்து காணி உரிமையாளர்களும், பொது மக்களும் இன்று காலை போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.