மாலபே பகுதியில் நிர்மாணிக்கப்படும் ஓர்கிட் தொடர்மனை – 2 இன் மூன்றாவதும் இறுதியானதுமான கட்டம் 22 ஏக்கர் பகுதியில் நிர்மாணிக்கப்படுகிறது. இதன் 100 அலகுகள் ஏற்கனவே விற்பனையாகியுள்ளதுடன், நகரை அண்மித்துள்ள சிறந்த குடியிருப்பு பகுதியாக அமைந்துள்ளமையாலம், நிவாஸி டிவலப்பர்ஸ் மீது வாடிக்கையாளர்கள் தொடர்ச்சியாக கொண்டுள்ள நம்பிக்கை காரணமாகவும் இந்த அலகுகள் அதிகளவில் விற்பனையாகியுள்ளன.

தாய் நிறுவனமான புகழ்பெற்ற ஒப்பந்த நிறுவனம் இன்டர்நஷனல் கொன்ஸ்டரக்ஷன் கொன்சோர்ட்டியம் பிரைவட் லிமிட்டெட்  (ICC)உடன் இணைந்து 12 மாடிகளை கொண்ட தொடர்மனை நிர்மாணிக்கப்படுகிறது. இதில் 160 அலகுகள் அமைந்துள்ளன. இந்த ஆண்டின் மார்ச் மாதத்தில் இதன் நிர்மாணப் பணிகள் பூர்த்தியடையும் என எதிர்பார்க்கப்படுவதுடன் உரிமையாளர்களுக்கு வீட்டு சாவிகள் கையளிக்கப்படும்.

இந்த பிராந்தியத்தில் முன்னெடுக்கப்படும் பெருமளவான வணிக மற்றும் குடியிருப்பு தொகுதிகளின் நிர்மாணப்பணிகள் காரணமாக இந்த குடியிருப்புகளுக்கும் அதிகளவு கேள்வி ஏற்பட்டுள்ளதாக நிவாஸி டிவலப்பர்ஸ் மாலபே முகாமைத்துவ பணிப்பாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான ஹேர்மன் கொன்சால் தெரிவிக்கையில்,

“புதிய வரி விதிமுறை அமுல்ப்படுத்தப்படவுள்ளமையால், தொடர்மனைகள் கொள்வனவு என்பது ஏப்ரல் 2018 ஆம் ஆண்டுக்கு பின்னர் வரி செலுத்த நேரிடும். இதனால் ஏப்ரல் மாதத்துக்கு முன்னர் நிவாஸி உடன் தொடர்மனைகளை கொள்வனவு செய்யும் போது 30 சதவீத வரி விலக்கழிப்பை பெற்றுக்கொள்ளக்கூடியதாக இருக்கும்.” என்றார்.

“இதன் காரணமாக முதலீடு மேற்கொண்ட சொத்தின் பெறுமதி 15 சதவீதத்தால் அதிகரிக்கும். நிவாஸி ஓர்கிட் தொடர்மனையில் சில அலகுகள் மட்டுமே எஞ்சியுள்ள நிலையில், இந்த திட்டம் பூர்த்தியடைந்ததும், இது போன்ற மேலும் பல திட்டங்களை எதிர்காலத்தில் நிர்மாணிப்பதற்கு நாம் எண்ணியுள்ளோம்” என்றார்.

பச்சைப்பசேலென பரந்த சூழல், பசுமையான காற்று, குறைந்த இரைச்சல், அமைதியான சூழலில், இலகுவாக வெளிச்சுற்று அதிவேக நெடுஞ்சாலைக்கு பயணிக்கக்கூடியதாக இருக்கின்றமை ஆகியன இந்த குடியிருப்பு பகுதியின் விசேட அம்சங்களாக காணப்படுகின்றன. முழுத்தொகுதியிலும் 170 வீடுகள் காணப்படுவதுடன், இரு தொடர்மனைகள் தலா 94 மற்றும் 160 அலகுகளை கொண்டிருக்கும். இவை இந்த பகுதியில் வீடொன்றை வாங்க அல்லது வாடகைக்கமர்த்த எதிர்பார்ப்போருக்கு சிறந்த தெரிவாக அமைந்திருக்கும்.

எமது வாடிக்கையாளர்களுக்கு நாம் நன்றிகளை தெரிவித்துக் கொள்வதுடன், பதினேழு ஆண்டுகளுக்கு மேலாக எம்மீது அவர்கள் கொண்டுள்ள நம்பிக்கையை நாம் பாராட்டுகிறோம். அவர்களின் முதலீடுகளுக்கு பெறுமதியை ஏற்படுத்திக் கொடுக்க நாம் எதிர்பார்க்கிறோம்.” என நிவாஸி டிவலப்பர்ஸ் மாலபே பொது முகாமையாளர் ரொஷானி பெரேரா தெரிவித்தார்.

நிவாஸி டிவலப்பர்ஸ் மாலபே பிரைவட் லிமிட்டெட்டின் உரிமையாண்மையின் கீழ் காணப்படும் ஓர்கிட் புரொஜெக்ட், 22 ஏக்கர் பகுதியில் மாலபேயில் அமைந்துள்ளது. இதில் மூன்று பிரத்தியேகமான நீச்சல் தடாகங்கள், இரு நடைபாதைகள், இரு பாரிய குளங்கள் மற்றும் சிறுவர் விளையாட்டு திடல் போன்றவற்றுடன், சூழ பச்சை வயல் வெளிகள் காணப்படுகின்றன.

நிவாஸி மற்றும் ICC ஆகியன இணைந்து பல்வேறு திட்டங்களை வெற்றிகரமாக பூர்த்தி செய்துள்ளன. இதனூடாக நிர்மாணம் மற்றும் வீடமைப்பு அபிவிருத்தி துறையில் மைல்கற்களை பதிவு செய்துள்ளன. 35 வருடங்களுக்கு மேலான உயர் மற்றும் பரந்த அனுபவத்துடன் நாட்டின் முன்னணி நிர்மாண நிறுவனமாக ICC திகழ்கிறது. உயர் தரத்தை பேணுவதுடன், உரிய காலத்தில் விநியோகத்தையும் மேற்கொண்டு வருகிறது.