மாலை­தீவு பாரா­ளு­மன்­ற­மா­னது  சர்­வ­தேச ரீதி­யான கடும் கண்­ட­னத்­துக்கு மத்­தியில் அந்­நாட்டில் அமுல்­ப­டுத்­தப்­பட்­டுள்ள அவ­ச­ர­கால சட்­டத்தை மேலும் 30  நாட்­களால் நீடிப்­ப­தற்கு ஆத­ர­வ­ளித்து வாக்­க­ளித்­துள்­ளது.

மேற்­படி அவ­ச­ர­கால சட்­டத்­திற்கு  இலங்­கையின் சபா­நா­யகர் கரு ஜெய­சூ­ரிய உள்­ள­டங்­க­லாக  தெற்­கா­சிய நாடு­களின் சபா­நா­ய­கர்­களும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களும்  நேற்று  முன்­தினம் செவ்­வாய்க்­கி­ழமை கடும் கண்­டனம் தெரி­வித்­தி­ருந்­தமை குறிப்­பி­டத்­தக்­கது.

ஆளும் கட்­சி­யி­னரின் செல்­வாக்­கி­லுள்ள மேற்­படி பாரா­ளு­மன்­றத்தின்  தீர்­மா­ன­மா­னது சட்­ட­வி­ரோ­த­மா­னது என  எதிர்க்­கட்­சி­யினர் குற்­றஞ்­சாட்­டி­யுள்­ளனர்.

இந்­நி­லையில் அவ­ச­ர­காலச் சட்டம் நீடிக்­கப்­ப­டு­வ­தற்கு எதிர்ப்புத் தெரி­வித்து அந்­நாட்டின் தலை­ந­கரில்  எதிர்க்­கட்சி ஆத­ர­வா­ளர்­களால்  ஆர்ப்­பாட்­டங்கள் நடத்­தப்­பட்­டன.

கடந்த பெப்­ர­வரி மாதம் அந்­நாட்டு ஜனா­தி­பதி  அப்­துல்லா யமீனால்  பிறப்­பிக்­கப்­பட்ட 15  நாள் அவ­ச­ர­கால சட்டம் ஏற்­க­னவே  உள்­நாட்­டிலும்  சர்­வ­தேச ரீதி­யிலும் கடும் கண்­ட­னத்தைச் சம்­பா­தித்­துள்ள  நிலை­யி­லேயே அந்த சட்டம் தற்­போது நீடிக்­கப்­பட்­டுள்­ளது.

எதிர்க்­கட்­சியைச் சேர்ந்த பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களை  விடு­தலை செய்­வ­தற்கு உச்ச நீதி­மன்­றத்தால் அளிக்­கப்­பட்ட தீர்ப்பை  தான் நிறை­வேற்றத் தவ­றி­யமை குறித்து   தன்னை கைது­செய்­வ­தற்கு  அந்த நீதி­மன்றம் உத்­த­ரவைப் பிறப்­பிக்­கலாம் என அஞ்­சிய யமீன், அவ­ச­ர­கால சட்­டத்தைப் பிர­க­ட­னப்­ப­டுத்தி  உச்ச நீதி­மன்ற தலைமை நீதி­ப­தி­யையும் பிறி­தொரு நீதி­ப­தி­யையும் கைது­செய்­வ­தற்கு உத்­த­ரவைப் பிறப்­பித்­தி­ருந்தார். அத்­துடன்  பல எதிர்க்­கட்சி ஆத­ர­வா­ளர்­களும் இந்த அவ­ச­ர­கால சட்­டத்தின் போது கைது­செய்­யப்­பட்­டி­ருந்­தனர்.