தென்­கொ­ரி­யாவில் நடை­பெற்­று­வரும் குளிர்­கால ஒலிம்பிக் போட்­டியில் ஐஸ் நடனத்தை ஆடும் போதே பிரான்ஸ் நாட்டை சேர்ந்த கேப்­ரி­யல்ல பாப்­பா­டாக்கிஸ் என்ற வீராங்­க­னையின் மேலாடை நழுவியுள்ளது. ஆனாலும் ஒரு கையால் நழுவிய ஆடையை பிடித்துக்கொண்டு அவர் போட்டியை நிறைவு செய்துள்ளார்.

இவ­ரது இணை ஆட்­டக்­காரர் 'குயிலாம் சீரான்' அந்த இக்­கட்­டான நிலையிலும் பதற்றத்தை வெளிக்­காட்­டாமல் அவ­ருக்கு துணையாக நின்று ஆடி­யி­ருக்­கிறார். 

ஐஸ் நடனப் போட்­டியில் ரஷ்யா, கனடா உள்­ளிட்ட நாடு­களின் வீராங்­க­னைகள் மிகவும் சிறப்­பாக விளை­யா­டி­னார்கள். 

இதில் பிரான்ஸ் நாட்டை சேர்ந்த கேப்­ரி­யல்ல பாப்­பா­டாக்­கிஸ் ­வி­ளை­யாடிக் கொண்டு இருக்கும்போது மேலாடை அவிழ்ந்து இருக்­கி­றது. 

ஆனாலும் இவர் போட்­டியை நிறுத்­த­வில்லை. ஒரு கையால் மேலா­டையை பிடித்துக் கொண்டே

விளை­யா­டினார்.                போட்­டியிலிருந்து வில­காமல்

இந்த ஜோடி முழு சுற்­றையும் முடித்­தது. இந்நிலையில் இந்த போட்­டியில் இவர்கள் மிக அதிக புள்­ளிகளைப் பெற்­றார்கள். மேலும் இரண்டாம் இடத்தையும் வென்றனர். இவரது இச்செயலை பலரும் பாராட்டி வருகிறார்கள்.