முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக்ஷ தலை­மை­யி­லான கடந்த அர­சாங்­கத்­தினை நல்­லாட்சி அர­சாங்கம் அர­சியல் பழி­வாங்கும் நோக்­கத்­துடன் ஜெனி­வாவில் காட்­டிக்­கொ­டுக்கும். குறித்த விட­யத்தின் பின்னர் இலங்கை பாரிய சர்­வ­தேச அழுத்­தங்­க­ளுக்கு முகம் கொடுக்க வேண்­டிய சூழ்­நிலை ஏற்­படும் என பாரா­ளு­மன்ற உறுப்­பினர் கெஹெ­லிய ரம்­புக்­வெல தெரி­வித்தார்.

ஐ.நா.  மனித உரிமை பேர­வையில் இலங்கை எதிர்­கொள்­ள­வுள்ள சவால்கள் தொடர்பில் தெளி­வு­ப­டுத்­திய போதே அவர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார்.

அவர் மேலும் குறிப்­பி­டு­கையில்,

இம்­மாதம் 26 ஆம் திகதி தொடக்கம் மார்ச் மாதம் 23ஆம் திகதி வரை ஜெனிவா மனித உரிமை பேர­வையின் 37 ஆவது கூட்­டத்­தொடர் இடம்பெற­வுள்­ளது. இக் கூட்­டத்­தொ­டரில் இலங்கை தொடர்பில் 4 முக்­கிய விட­யங்கள்   தொடர்பில் விவா­தங்கள்  இடம்பெற­வுள்­ளன.   

இலங்கை தொடர்பில் சர்­வ­தேச நாடுகள் குறிப்­பாக மக்­களால்  வெறுக்­கப்­பட்ட நல்­லாட்சி அர­சாங்­கத்­தினை ஆத­ரிக்கும் மேற்­கத்­தேய நாடுகள் கடந்த கூட்­டத்­தொ­டர்­க­ளில்­ இ­லங்­கைக்கு எதி­ராக பாரிய அழுத்­தங்­களை பிர­யோ­கித்­தன. அதன் கார­ண­மாக இலங்கை பாரிய தாக்­கங்­களை கடந்த காலங்­களில் எதிர்­கொண்­டது. நல்­லாட்சி அர­சாங்­கமும் அவற்றை உண்மை என்று நிரூ­பிக்கும் வித­மாக மௌனம் காத்­தமை காணக்­கூ­டி­ய­தாக இருந்­தது.

குறித்த கூட்­டத்­தொ­டரில் மனித உரிமை ஆணை­யாளர் இலங்­கையின் பொறுப்­புக்­கூறல் மற்றும் நல்­லி­ணக்க விட­யத்தின் அச­மந்த போக்­கினை கண்­டித்து அதி­ருப்தி அறிக்­கை­யினை வெளி­யி­ட­வுள்­ள­தாக எதிர்­பார்க்­கப்­பட்­டுள்­ளன. தற்­போது நாட்டில் பாரிய அளவில் அர­சியல் நெருக்­க­டிகள் இடம்­பெற்­றுள்­ளது. இதனை காரணம் காட்டி நல்­லாட்சி அர­சாங்கம் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக் ஷ தலை­மை­யி­லான கடந்த அர­சாங்­கத்­தினை காட்­டிக்­கொ­டுத்து தமது அர­சியல் பழி­வாங்­க­லினை நிறை­வேற்­றி­விடும் என்ற அச்சம் தற்­போது தோன்­றி­யுள்­ளது.

எதிர்­க்கட்சி பதவி தொடர்பில் பாரிய சர்ச்­சைகள் இடம்­பெற்று வரு­கின்­றன . இதனை பயன்­ப­டுத்தி சிலர் நாட்டில் தமிழ் மற்றும் சிங்­கள மக்­க­ளி­டையே இன­வா­தத்­தினை உரு­வாக்கிக் கொள்ள முயற்­சிக்­கின்­றனர். தமிழ் மக்கள் தாம் தொடர்ச்­சி­யாக ஏமாற்­றப்­பட்­டதை உணர்ந்­ததன் பின்னர் தமது எதிர்ப்­  பினை நல்­லாட்சி அரசாங்கத்­திற்கு எதி­ராக வெளிப்­ப­டுத்­தினர்.

தமிழ்­தே­சிய கூட்­ட­மைப்­பினை வடகி­ழக்கு மக்கள் நிரா­க­ரித்து விட்­ட­மை­யினை தேர்தல் பெறு­பே­றுகள் நன்கு புலப்­ப­டுத்தி நிற்­கின்­றன. தமக்கு அர­சியல் தீர்வு பெற்றுத் தரு­வ­தாக கூறி தொடர்ந்து ஏமாற்­றப்­பட்­ட­தையும், அதன் கார­ண­மாக இனி­வரும் காலங்­களில் எவ்­வித பயனும் தோன்­றாது என்­ப­தையும்    உணர்ந்த தமிழ் மக்கள் யதார்த்த நிலைக்கு உட்­பட்டு சுய­மான தீர்­மா­னத்­தினை மேற்­கொண்­டுள்­ளனர்.   

தமிழ் தேசிய கூட்­ட­மைப்பு மக்­களின் குறிப்­பாக தமிழ் மக்­களின் தீர்­மா­னத்­தினை மதித்து செயற்­பட வேண்டும். மக்கள் புதிய மாற்­றத்­தினை நோக்கி பய­ணிக்கும்பொழுது அதற்கு தடை­யாக அர­சியல் சூழ்ச்­சி­களை பிர­யோ­கிப்­பது அம்­மக்­க­ளுக்கு விரோ­த­மான செய­லா­கவே காணப்­ப­டு­கின்­றது.

எதிர்க்கட்சி தலைவர் நல்­லாட்சி அர­சாங்­கத்தின் அர­சியல் நலனை மாத்­தி­ரமே பற்றி கவனம் செலுத்­து­கின்றார். நாட்டின் தேசிய நலன் குறிப்­பாக தமது இனத்தின் நலன் தொடர்பில் கவனம் செலுத்த தவறவிட்­ட­மையே அவ­ரது பத­விக்கு தற்­போது ஏற்­பட்­டுள்ள சோத­னைக்கு முக்­கிய கார­ண­மாக காணப்­ப­டு­கின்­றது.

தேசிய அரசாங்கம் கடந்த கால அரசாங்கத்தினை பழிவாங்கும் நோக்கத்தில் செயற்பட்டு நாட்டினை காட்டிக்கொடுக்காமல் நாட்டின் எதிர்காலத்தின் நலன் கருதி செயற்பட வேண்டும். அவ்வாறன்றில் கடந்த தேர்தலில் மக்கள் வெளிப்படுத்திய எதிர்ப்பினை விட பல மடங்கான எதிர்ப்பினை பொதுமக்கள் வெளிப்படுத்த நேரிடும் என தெரிவித்தார்.