நடிகர் கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் என தனது கட்சியின் பெயரை நேற்று மதுரையில் உத்தி யோகபூர்வமாக அறிவித்தார்.

ஜெயலலிதாவின் மறைவு மற்றும் திமு.க.தலைவர் கருணாநிதியின் அரசியல் ஓய்வு என்பன காரணமாக தமிழக அரசியலில் இடம்பெற்றுள்ள வெற்றிடத்தை யார் நிரப்புவார் என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில் நடிகர்களான  கமல்ஹாசள் மற்றும்  ரஜினிகாந்த் ஆகியோர் அரசியலில் களமிறங்கியுள்ளனர். நடிகர் ரஜினி இன்னும் தனது கட்சியின் பெயரை அறிவி்கவில்லை.  

இந்நிலையில் இராமேஸ்வரத்தில் உள்ள இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் இல்லத்திலிருந்து   நடிகர்  கமல்ஹாசன் நேற்று தனது அரசியல் பயணத்தை ஆரம்பித்தார். பின்னர் இராமேஸ்வரத்திலிருந்து இராமநாதபுரம் , பரமகுடி , மானாமதுரை ஆகிய இடங்களில் பொதுமக்களை சந்தித்தார். பின்னர்  மதுரை   ஒத்தகடை மைதானத்தில் நேற்று மாலை நடைபெற்ற  தனது முதலாவது அரசியல் பொது கூட்டத்தில் தனது கட்சியின் கொடியை ஏற்றி வைத்த பின்னர்  தனது கட்சியின் பெயரை மக்கள் நீதி மய்யம்  என  அறிவித்தார்.

அவரது கட்சி கொடி வௌ்ளை நிறத்தில்  சிவப்பு, வெள்ளை கைகள் இணைந்திருக்க நடுவில் கருப்பு நிறத்தில் நட்சத்திரம் இடம்பெற்றுள்ளது.கட்சியின் பெயரை அறிவித்ததோடு சொல்லிப்பழகுங்கள் கட்சியின் பெயரை மக்கள் நீதி மய்யம் என்று உரக்க கமல்ஹாசன்  சொன்னார். பல்லாயிரக்கணக்கான மக்கள் இப்பொதுகூட்டத்தில் கலந்து கொண்டு கமலுக்கு ஆதரவு அளித்தனர். இதன்போது  டில்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் பங்கேற்றமை குறிப்பிடத்தக்கது.