நல்லாட்சியின் புதிய பொருளாதாரக் கொள்கைத் திட்டங்கள்  நாளை வெளியிடப்படும் : ராஜித சேனாரட்ன

Published By: Priyatharshan

22 Feb, 2018 | 07:47 AM
image

நல்லாட்சி அரசாங்கத்தில்  எதிர்வரும்  இரண்டு வருடங்களில் மக்களுக்கு தேவையான முக்கியத்துவம் மிக்க பொருளாதாரம்  அபிவிருத்தித்திட்டங்களை முன்னெடுப்பதற்காக அமைச்சர் சரத் அமுனுகம தலைமையில் விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. 

இந்தக் குழு நாளை வெள்ளிக்கிழமை  புதிய பொருளாதார திட்டங்களை அறிவிக்கும் என்று அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான ராஜித சேனாரட்ன தெரிவித்தார். 

அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்ற வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும்  செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு ஊடகவிலயாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு  குறிப்பிட்டார். 

 அமைச்சர் அங்கு மேலும் குறிப்பிடுகையில்:-  

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் எதிர்வரும்  இரண்டு வருடங்களில் முன்னெடுக்கப்படவேண்டிய பொருளாதார அபிவிருத்திட்டங்கள் தொடர்பில் ஆராய்ந்து திட்டங்களை அறிவிக்க    சரத் அமுனுகம தலைமையில் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. 

அந்தக்குழு  அடுத்த இரண்டு வருடங்களில் மக்களுக்கு  எவை முக்கியமானவையோ அவற்றைத் தெரிவு செய்து வெள்ளிக்கிழமை நாட்டு மக்களுக்கு அறிவிக்கும். 

கேள்வி: எவ்வாறான திட்டங்களை முன்னெடுப்பீர்கள்?

பதில்: கடந்த மூன்று வருடங்களில் செய்யாத  அதேநேரம்  ஜனவரி 8ஆம் திகதி வழங்கிய வாக்குறுதிகளை   நிறைவேற்றும் வகையில் இந்தக்கொள்கைத்திட்டங்களை  சரத் அமுனுகம தலைமையிலான குழு நாளை வெள்ளிக்கிழமை முன்வைக்கும். 

அதாவது நாம் வழங்கிய வாக்குறுதிகளில் முக்கியமானவற்றை நிறைவேற்றுவோம்.  வாழ்கைச்செலவு கடந்த காலத்தில் அதிகரித்தது.  அதனை ஏற்றுக்கொள்கின்றோம். அதனைப்போன்று  உரம் வழங்கும் விடயத்தில் தவறிழைத்திருக்கின்றோம். மேலும்   முன்னைய ஆட்சியாளர்களின் கொள்ளைகள் தொடர்பில் விசாரணை நடத்தப்படும்.   மூன்று மேல் நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டு தொடர்ச்சியாக விசாரணை நடத்தப்பட்டு  முன்னைய ஆட்சியாளர்களுக்கு தண்டனை வழங்குவோம். 

கேள்வி: டெப் வழங்கும் திட்டம்  ஏன் நிறுத்தப்பட்டது?

பதில்: அது தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. 400 கோடி ரூபா என்பது மிகப்பெரிய ஒரு நிதி தற்போதைய நிலைமையில் அவ்வளவு  பெரிய தொகையைக் கொண்டு இதை செய்யவேண்டுமா? இதனால் மாணவர்களுக்கு என்ன பயன் கிடைக்கும் என்பது  போன்ற விடயங்கள் குறித்து அமைச்சரவையில்  ஆராயப்பட்டது. அதன்   இறுதியில்  இதனைத் தற்காலிகமாக நிறுத்துவதற்கும்  மாதிரித் திட்டமொன்றை முன்னெடுப்பதற்கும்  தீர்மானிக்கப்பட்டது. அதாவது இந்தத் திட்டத்தில்  20 வீதமான  பகுதியை  முன்னெடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டது. 

 இந்த விடயத்தில்   ஐக்கிய தேசியக்கட்சியும் சிறிலங்கா சுதந்திரக்கட்சியும் இணைந்தே தீர்மானம் எடுத்தன. 

கேள்வி: ஏன் அரசாங்கத்திடம் நிதி இல்லையா?

பதில்: கடந்த காலத்தில்   வரையறையை மீறி கடன் பெறப்பட்டுள்ளது. குறிப்பாக திறைசேரியே அனைத்துக் கடன்களையும் பெறாமல்  இலங்கை வங்கி , தேசிய  சேமிப்பு வங்கி,  நெடுஞ்சாலைகள் திணைக்களம் போன்ற நிறுவனங்களின் ஊடாக கடன் பெறப்பட்டுள்ளது. ஆனால் இறுதியில் திறைசேரியே கடனை  செலுத்தவேண்டும்.  தற்போது  நாங்கள் அந்த விபரங்களை சேகரித்து வருகின்றோம். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சர்வோதய இயக்க ஸ்தாபகர் ஆரியரத்ன காலமானார்!

2024-04-16 20:59:37
news-image

வெடுக்குநாறிமலை அட்டூழியம்! மனித உரிமைகள் ஆணைக்குழு...

2024-04-16 20:16:08
news-image

மின்சாரம் தாக்கி பாலித தேவரப்பெரும உயிரிழந்தார்!

2024-04-16 19:48:23
news-image

அதிவேக நெடுஞ்சாலையை பயன்படுத்தும் சாரதிகளுக்கு விசேட...

2024-04-16 19:16:12
news-image

நச்சுத் தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 505 பேர்...

2024-04-16 19:17:56
news-image

சாரதி உறங்கியதால் கிணற்றில் வீழ்ந்த ஆட்டோ...

2024-04-16 19:20:19
news-image

380 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள்...

2024-04-16 17:51:28
news-image

மாறி மாறி வருகின்ற அரசாங்கத்துடன் கூட்டு...

2024-04-16 17:03:46
news-image

சுகாதாரத்துறையில் மருந்துப்பொருள் மோசடி மட்டுமல்ல ;...

2024-04-16 17:05:24
news-image

தமிழ் மக்களின் சுமைதாங்கும் தர்ம தேவதையாக...

2024-04-16 16:32:21
news-image

கொழும்பு, புதுக்கடையில் சுற்றுலாப் பயணிகளை அச்சுறுத்தி...

2024-04-16 21:07:31
news-image

நுவரெலியா - லிந்துலை சிறுவர் பராமரிப்பு...

2024-04-16 16:28:10