தேசிய அரசாங்கம் குறித்த இறுதி நிலைப்பாட்டை பாராளுமன்றில் தெரிவித்தார் பிரதமர்

Published By: Priyatharshan

21 Feb, 2018 | 11:32 PM
image

(எம்.எம்.மின்ஹாஜ், ஆர்.யசி)

இரு பிரதான கட்சிகளும் ஒன்றிணைந்து தேசிய அரசாங்கத்தில் தொடர்ந்து பயணிக்கும். நாம் பாராளுமன்றத்திற்கு முன்வைத்த யோசனையை இரத்து செய்யவில்லை. அத்துடன் தேசிய அரசாங்கமொன்றை அமைப்பதாக பாராளுமன்றத்திற்கு பிரேரணையொன்றை மாத்திரமே நாம் முன்வைத்தோம். அதனைவிடுத்து நாம் ஒப்பந்தகளோ அல்லது ஆவணங்களோ முன்வைக்கவில்லை. ஆகையால் தேசிய அரசாங்கத்தை கொண்டு போவதற்கு எழுத்து மூல ஆவணங்களோ ஒப்பந்தங்களோ அவசியமில்லை என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்க சபையில் தெரிவித்தார். 

இதன்படி அரசியலமைப்பின் பிரகாரம் தேசிய அரசாங்கத்தை நாம்   தொடர்ந்து கொண்டு செல்வோம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

பாராளுமன்றத்தில் புதன்கிழமை ஐக்கிய தேசியக் கட்சி சார்பாக விசேட கூற்றொன்றை முன்வைத்து உரையாற்றுகையிலேயே பிரதமர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் உரையாற்றுகையில்,

இரு பிரதான கட்சிகளும் ஒன்றிணைந்து தேசிய அரசாங்கத்தை அரசியலமைப்பின் பிரகாரம் தொடர்ந்து கொண்டு செல்வோம். இது தொடர்பாக நானே பாராளுமன்றத்தில் யோசனையொன்றை முன்வைத்தேன். ஆகவே எமது பயணத்தை இரத்து செய்யவில்லை என்றார்.

இதன்போது இடைநடுவே குறுக்கிட்டு பேசிய அநுர குமார திஸாநாயக்க,

தேசிய அரசாங்கத்தை தொடர்ந்து கொண்டு செல்வதாக தற்போது கூறினாலும். ஏற்கனவே பாராளுமன்றத்திற்கு முன்வைத்த யோசனையின் பிரகாரமும் ஜனாதிபதியும் பிரதமரும் பாராளுமன்றத்தில் கருத்து தெரிவித்ததன் பிரகாரம் இரண்டு வருடங்களுக்கே பயணிப்போம் என்று கூறினர். இந்நிலையில் குறித்த ஒப்பந்தம் செப்டம்பர் மாதம் நிறைவடைந்து விட்டது. இதன்படி தேசிய அரசாங்க ஒப்பந்தம் நிறைவடைந்து நான்கு மாதங்கள் பூர்த்தியாகி விட்டன. ஆகவே தற்போது இணைந்து செயற்படுவதாக கூறினாலும்  நான்கு மாதங்கள் இருந்த அமைச்சரவை சட்டத்திற்கு முரணானது. ஏனெனில் 48 க்கு குறைவாகவே அமைச்சராகவும் 45 க்கு குறைவாகவே இராஜாங்க, பிரதி அமைச்சர்கள் இருக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது. ஆகவே நான்கு மாதங்களில் அமைச்சரவை சட்டத்திற்கு முரணாகும் என்றார்.

இதனை தொடர்ந்து பதிலளித்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க,

தேசிய அரசாங்கமாக பயணிப்போம் என ஐக்கிய தேசியக் கட்சி சார்பாக நான் பாராளுமன்ற பிரேரணையொன்றை முன்வைத்தேன். இதன்படி அரசியலமைப்பின் 46 கீழ் 4 பிரகாரம் தேசிய அரசாங்கம் தொடர்ந்து செல்வதற்கு அதிகாரம் உள்ளது. அத்துடன் அரசியலமைப்பின் 48 ஷரத்தின் பிரகாரம் அமைச்சரவை எண்ணிக்கை அதிகரிக்கவும் குறைக்கவும் முடியும். இதன்படி தேசிய அரசாங்கத்தை கொண்டு செல்வதற்கு ஒப்பந்தம் அவசியமில்லை. 

பொதுவாக தேசிய அரசாங்கமொன்று உருவாக்கும்போது ஒப்பந்தங்கள் தேவைப்படாது. இதன்படி பிரித்தானியாவில் 1940 ஆம் ஆண்டு வின்சன்ட சேச்சில் தலைமையில் தேசிய அரசாங்கம் உருவாக்கப்பட்ட போது ஒப்பந்தங்கள் ஏதும் கைச்சாத்திடப்படவில்லை. ஆகவே தேசிய அரசாங்கத்தை உருவாக்கும் போது பாராளுமன்றத்தில் யோசனையொன்றை மாத்திரமே முன்வைத்தேன்.  அதற்கு மாறாக தேசிய அரசாங்கம் தொடர்பான ஒப்பந்தங்களையோ அல்லது ஆவணங்களையோ நாம் சமர்ப்பிக்கவில்லை. ஆகவே ஒப்பந்தம் ஒன்று எமக்கு அவசியமில்லை. எமது உரையைகளில் இரண்டு வருடங்கள் என கூற முடியும். எனினும் நாம் ஒப்பந்ததின் பிரகாரம் நாம் செயற்படவும் இல்லை. 

இதன்படி ஒப்பந்தம் ஒன்று அவசியமில்லை. தேசிய அரசாங்கம் என்ற வகையில் தொடர்ந்து பயணிப்போம் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தேர்தலுக்கு பணம் திரட்டுவதற்காக அரசாங்கம் 2...

2024-03-19 16:45:00
news-image

நெடுங்கேணியில் துப்பாக்கியுடன் ஒருவர் கைது!

2024-03-19 16:49:55
news-image

கோப் குழுவிலிருந்து மரிக்கார் இராஜினாமா!

2024-03-19 16:40:26
news-image

யாழ். பல்கலை முன்றலில் போராட்டம்

2024-03-19 16:32:24
news-image

லிந்துலையில் வர்த்தக நிலையம் உடைத்து கொள்ளை

2024-03-19 16:18:54
news-image

கோப் குழுவிலிருந்து சரித ஹேரத் இராஜினாமா!

2024-03-19 15:59:04
news-image

“ குபுகட பச்சயன்” குற்றக் கும்பலை...

2024-03-19 16:00:44
news-image

கிழக்குப் பல்கலைக்கழக ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

2024-03-19 16:00:14
news-image

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் முழுநாள் வேலைநிறுத்தம்!

2024-03-19 16:06:01
news-image

தமிழக கடற்தொழிலாளர்களின் அத்துமீறல்களை கண்டித்து யாழில்...

2024-03-19 15:38:30
news-image

பிரபல பாதாள உலக, போதைப்பொருள் கடத்தல்...

2024-03-19 15:28:47
news-image

நானுஓயாவில் கஞ்சா போதைப்பொருளுடன் லொறி சாரதி...

2024-03-19 14:59:13