வாய்மூடி இருந்த சுமந்திரன் ஏன் இறுதி நேரத்தில் குழப்பினார் ; திட்டமிட்ட சதியென்கிறார் வாசு

Published By: Priyatharshan

21 Feb, 2018 | 11:05 PM
image

(எம். எம். மின்ஹாஜ், ஆர்.யசி)

 பிணைமுறி அறிக்கை குறித்து சபையில் முன்வைக்கவிருந்த காரணிகளை தடுக்க ஆளும் தரப்பும் தமிழ் தேசியக் கூட்டமைப்பும் இணைந்து விவாதத்தை தடுத்தனர். இது திட்டமிட்ட  சதியென கூட்டு எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயகார குற்றம் சுமத்தினர். எனினும் நான் முன்வைத்த கோரிக்கை நியாயமானது, சட்ட விதிமுறைக்கு ஏற்றதாகவே அமைந்துள்ளது என சுமந்திரன் வாசுவின் குற்றச்சாட்டை நிராகரித்தார். 

பாராளுமன்றத்தில் புதன்கிழமை ஒழுங்குப் பிரச்சினை எழுப்பி உரையாற்றுகையில் கூட்டு எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயகார கூறுகையில்,

மத்திய வங்கி பிணைமுறி அணைக்குழு அறிக்கை மற்றும் பாரிய நிதி மோசடி குறித்த ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கைகள் நேற்றைய தினம் விவாதத்திற்கு எடுத்துகொள்ளப்படவிருந்தது. இவை குறித்து விவாதத்திற்கு எடுத்துகொள்ளப்படவிருந்த நிலையில் கூட்டு எதிர்க்கட்சி சார்பில் நானே விவாதிக்க தயாரானேன்.

எனினும் பாரிய நிதி மோசடி ஆணைக்குழுவின் அறிக்கை தமிழ் மொழியில் இல்லாத காரணத்தினால் தம்மால் விவாதத்தில் ஈடுபட முடியாது என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் எம்.பி சுமந்திரன் சபையில் முரண்பட்டார். அவரது  கோரிக்கையின் நியாயத்தை கருத்தில் கொண்டு விவாதத்தை பிற்போட முடியும் என்பதை நானும் ஏற்றுக்கொண்டேன்.

எனினும் அதன் பின்னர் ஆராய்ந்து பார்த்ததில் கடந்த 6 ஆம் திகதி நடத்தவிருந்த விவாதத்தின் போது  மொழி பெயர்ப்பு பிரச்சினையினை தமிழ் தேசியக் கூட்டமைப்பு வெளிபடுத்தவில்லை. பாரளுமன்ற செயற்பாடுகள் தொடர்பிலான கூட்டத்திலும் இந்த பிரச்சினையினை முன்வைக்கவில்லை.

அப்போதெல்லாம் வாய்மூடி இருந்த சுமந்திரன் ஏன் இறுதி நேரத்தில் விவாதத்தை குழப்பினார். ஏனெனில் பிணைமுறி அறிக்கை குறித்து நாம் சபையில் முன்வைக்கவிருந்த காரணிகளை தடுக்க வேண்டும் என்ற தேவை அரசாங்கத்திற்கு இருந்தது. பிரதமரும் நெருக்கடியில் இருந்த நிலையில் இவர்கள் இரு தரப்பும் இணைந்து முன்னெடுத்த சதியென நான் சபையில் குற்றம் சுமத்துகின்றேன் எனக் குறிப்பிட்டார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56