இருபத்தொராம் நூற்றாண்டின் சமகால வர்த்தகப் போக்குகள், தொழில் ஒழுக்கநெறிகள் மற்றும் நிறுவனரீதியான சமூகப் பொறுப்புக்கள் ஆகியவற்றை உள்ளடக்கியதாக தொழிற்படுகின்றது. 

அனைத்து வர்த்தக நிறுவனங்களும் தமது சமூகத்துக்கு விசேட “நன்மையினை” செய்வதற்கு முயற்சிக்கின்றன. நிலைநாட்டப்பட்டுள்ள நிறுவனரீதியான ஒழுக்கநெறிகள் மற்றும் நிறுவன ரீதியான சமூகப் பொறுப்பு,  ஆகிய அடிக்கடி செவியில் விழும் கோட்பாடுகளுக்கு சவால்விடுக்கும் வகையில் சமூகம்சார் பொறுப்புமிக்க நிறுவனரீதியான பிரஜையாக உருவாவதன் உண்மையான பொருளை எடுத்தியம்பும் முகமாக HNB அசூரன்ஸ் (HNBA) 2017 ஆம் ஆண்டு காலப்பகுதியில் நிறுவனரீதியான ஏராளமான சமூகம்சார் பணிகளை மேற்கொண்டுள்ளது.

இது தொடர்பில் தமது கருத்துக்களைத் தெரிவித்த, HNBA மற்றும் அதன் உப நிறுவனமாக வரையறுக்கப்பட்ட HNB ஜெனரல் இன்சூரன்ஸ் (HNBGI) இன் முகாமைத்துவப் பணிப்பாளர் மற்றும் பிரதம நிறைவேற்று உத்தியோகத்தர், திரு.தீப்தி லொக்குஆரச்சி, “பாதுகாப்பு மற்றும் மக்களது நலனோம்புகையை நோக்காகக் கொண்டுள்ள ஒர் இயக்கமென்ற வகையில், சமூக மற்றும் சூழல்சார் மாற்றங்களை மேற்கொள்வது குறித்து நாங்கள் எங்களுக்கே சவால் விடுக்கின்றோம். எமது நிறுவனமானது எமது சமூகம், சூழல் மற்றும் மக்கள் மீது கூடிய கவனம் செலுத்துகின்றது. சூழலுக்கு ஏற்படும் பாதிப்புக்களைக் குறைப்பதற்கும், மக்களது வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்கும் இயலுமான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டிருப்பதை உறுதி செய்வதற்கு எமது குழுவானது கடின முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. எமது நிறுவனமானது தமது நிறுவனரீதியான சமூகப்பொறுப்புக்களை, நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டு ஏழு துறைகளாக வகைப்படுத்தியுள்ளது. எமது ஒரே நோக்கம் எமது சமூகத்தைப் பாதுகாப்பதும் நாம் முன்னெடுக்கும் சகல முயற்சிகள் வழியாகவும் அவர்களது உதட்டில் உதிரும் சிரிப்பினைக் காண்பதுமேயாகும் என்பதுடன் நாங்கள் எப்பொழுதும் அர்த்தமுள்ள ஒரு மாற்றத்தை ஏற்படுத்துவதற்கும் மக்களது வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்கும் முயற்சிப்போம் எனத் தெரிவித்தார்.

எமது நிறுவனத்தின் விருதுபெற்ற நீர் பாதுகாப்பு வேலைத்திட்டத்தின் கீழ் (HNBA Water Stewardship Programmme) அந்த வருடத்தினுள் நான்கு பாடசாலைகளுக்கு குடிநீர் வசதி வழங்கப்பட்டதுள்ளதுடன் இதன் மூலம் 50 பாடசாலைகளைச் சேர்ந்த 6,500 இற்கும் மேற்பட்ட மாணவர்கள் நன்மை பெறுகின்றார்கள். எமது நிறுவனத்தின் நிறுவன ரீதியான சமூகப்பொறுப்புகள் பற்றி கருத்துத் தெரிவித்த HNBA மற்றும் HNBGI இன் சந்தைப்படுத்தல் பிரதானி திரு.தினேஷ் யோகரத்னம், நிறுவனம் முன்னெடுத்த ஏராளமான நிறுவனரீதியான சமூகப் பொறுப்புக்களை நோக்குகையில் விளையாட்டுத் துறைசார்ந்ததாக இந்தியாவின் ஹைந்ராபாத் நகரில் இடம்பெற்ற மூன்றாவது ஆசிய செவிப்புலனற்றோருக்கான கிரிக்கெட் கிண்ணப் போட்டிக்கு HNBA அணுசரணை வழங்கியது.

கலை மற்றும் கலாச்சார துறைகளைச் சேர்ந்த கலைஞர்களுக்கு எமது நிறுவனம் நிதி அணுசரணை வழங்கியது. கல்வித்துறைசார்ந்ததாக பாடசாலைகள் மறுசீரமைப்பு வேலைத்திட்டத்தில் நாம் பங்காளிகளாவோம். மேலும், இதன் மூலம் வசதிகுறைந்த பாடசாலைகளின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல் மற்றும் பல்கலைக்கழக மாணவர்களுக்கான பல்வேறுபட்ட புலமைப்பரிசில்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன. அத்தியாவசிய தேவை நிலவுவதாக நாம் கருதும் துறைகளில், எமது நிறுவனரீதியான செயற்பாடுகள் வழியாக எம்மால் இயன்றளவு அதிகமான எண்ணிக்கையினருக்கு சலுகைளை வழங்குவதற்கு நாம் முயற்சிக்கின்றோம். எமது சமூகத்தில் வாழ்பவர்களை வாழ வைப்பதற்கும் அவர்களது வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்கும் நாங்கள் எமக்கே தனித்துவமான முறையில் எமது பங்களிப்பினை தொடர்ச்சியாக மேற்கொள்வோம்.

HNB  அசூரன்ஸ் PLC (HNBA) 56 கிளைகளைக் கொண்டதாக இலங்கையில் வேகமாக வளர்ந்துவரும் காப்புறுதி கம்பனிகளில் ஒன்றாகத் திகழ்கின்றது. HNB, A என்பது தேசிய காப்புறுதி நிதியியல் சக்தி தரப்படுத்துதல் மற்றும் தேசிய நீண்டகால தரப்படுத்தல்  ஆகியவற்றுக்காக பிச் ரேடிங் லங்காவினால் வழங்கப்பட்ட A (lka) தரப்படுத்தலைக் கொண்டுள்ள ஆயுட் காப்புறுதிக் கம்பனியாகும். காப்புறுதி முன்னோடிகளினால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள பிரித்து வைக்கும் ஒழுங்குவிதிக்கமைய செயற்பட்டு HNBGI கம்பனியை உருவாக்கி 2015 ஜனவரி மாதம் முதல் தமது கருமமாற்றல் பணிகளை ஆரம்பித்ததுடன் HNBGI கம்பனியானது மோட்டர் வாகனங்கள் மோட்டார் வாகனங்களற்ற மற்றும் தக்காவுல் காப்புறுதி நடவடிக்கைகளில் ஈடுபடும் HNB அசூரன்ஸ் PLC கம்பனிக்கு முழுமையாக உரித்தான நிருவாக கம்பனியாகும். HNBA கம்பனியும் LMD இனால் தரப்படுத்தப்பட்ட முதல் வரிசையிலான 100 வர்த்தகக் குறியீடுகளினுள்ளும் இலங்கையில் முன்வரிசையில் திகழும் 100 கம்பனிகளுக்கு உரித்தான குறியீட்டுப் பெயர் விசேடத்துவம், டிஜிட்டெல் சந்தைப்படுத்தல் மற்றும் மனிதவள சிறப்புத்தன்மைக்காக சர்வதேச விருதுகளைப் பெற்றுள்ளது. இலங்கையின் பட்டயக் கணக்காளர் நிறுவனம் மற்றும் தெற்காசிய கணக்காளர் சங்கம் ஒழுங்குசெய்த விருது வழங்கும் வைபவத்தின்போது தமது வருடாந்த அறிக்கைக்கு பல விருதுகளையும் பெற்றுக்கொண்டது.