(ரொபட் அன்டனி)

சர்ச்சைக்குட்பட்ட   பிரித்தானியாவுக்கான இலங்கைத் தூதரகத்தில் பணியாற்றும் இராணுவ  அதிகாரி பிரிகேடியர் பிரியங்க  பெர்னாண்டோ கலந்துரையாடல் ஒன்றுக்காகவே இலங்கைக்கு மீள அழைக்கப்படுகின்றார்.  

அதனை விடுத்து அவருக்கு எதிராக  ஒழுக்காற்று நடவடிக்கையோ விசாரணையோ  முன்னெடுக்கப்படாது என்று இராணுவப் பேச்சளார்  பிரிகேடியர் சுமித் அத்தபத்து தெரிவித்தார். 

தகவல் திணைக்களத்தில்  இன்று நடைபெற்ற செய்தியாளர்  சந்திப்பிலேயே  இதனைக் குறிப்பிட்டார். 

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

கேள்வி: பிரித்தானியாவில் உள்ள இலங்கை தூதரகத்தின் பாதுகாப்பு அதிகாரி பிரியங்க பெர்னாண்டோ ஏன் இலங்கைக்கு  அழைக்கப்படுகின்றார்?

பதில்: ஆலோசனை கலந்துரையாடல் ஒன்றுக்காக அவரை இராணுவத் தளபதி அழைக்கின்றார். 

கேள்வி: அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படுமா?

பதில்: இல்லை எவ்விதமான நடவடிக்கையும் எடுக்கப்படமாட்டாது. 

அவர் பாரிய குற்றங்கள் எதையும் செய்ததாக கருதவில்லை.  அந்த இடத்தில்   பிரபாகரன்  மற்றும்  தனி ஈழம் குறித்து ஆர்ப்பாட்டக்காரர்கள் பேசியிருக்கின்றனர். 

அதனால் அந்த அதிகாரி அவ்வாறு நடந்துகொண்டிருக்கின்றார்.  அதில் எந்தப் பெரிய தவறையும் நாங்கள்  காணவில்லை.