தியத்தலாவை - கஹகொல்ல பகுதியில் தனியார் பேரூந்தில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்திற்கும் பயங்கரவாதத்தாக்குதலுக்கும் எவ்வித தொடர்பும் இல்லையென இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் சுமித் அத்தப்பத்து தெரிவித்தார்.

ஊடக மத்திய நிலையத்தில் இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

இன்று காலை தியத்தலாவை –கஹகொல்ல பகுதியில் தனியார் பேரூந்தொன்றில் ஏற்பட்ட வெடிப்பையடுத்து ஏற்பட்ட தீயில் சிக்கி 7 இராணுவத்தினரும் 5 விமானப்படை வீரரரும் 7 பொதுமக்களும் காயமடைந்துள்ளனர்.

இருப்பினும் இது ஒரு பயங்கரவாதத் தாக்குதல் அல்லவெனவும் இது தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என அவர் மேலும் தெரிவித்தார்.

மேலதிக செய்திகளுக்கு 

பேரூந்தில் தீ பரவியமைக்கான காரணம் வெளியாகியது ! 11 பேரின் நிலைமை கவலைக்கிடம்

பேரூந்தில் தீ ; காயமடைந்த 19 பேரில் 12 பேர் இராணுவத்தினர் !