கென்யாவில் வாழும் நபர் ஒருவர் 39 பெண்களை திருமணம் செய்து கொண்டு 103 குழந்தைகளுக்கு தந்தையாகியுள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

நண்டோலியா கிராமத்தை சேர்ந்த 68 வயதான நபர் தன்னை பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த தீர்க்கதரிசி ஜானின் அவதாரம் என  கூறி கொண்டு இதுவரை 39 பெண்களை திருமணம் செய்து கொண்ட நிலையில் 103 பிள்ளைகளுக்கு தந்தையாகியுள்ளார்.

மேலும் குறித்த நபருக்கு 232 பேர குழந்தைகளும் உள்ளனர்.

குறித்த நபரின் மூன்று மனைவிகள் உயிரிழந்து விட்டனர்.

சிறுவயதிலிருந்து மாமிசம் சாப்பிடாத இவர் ஒருமுறை கூட முகத்தை சவரம் செய்து கொண்டதில்லை.

"நான் என் வருங்கால மனைவிகளை தேடி செல்வதில்லை, கடவுள் தான் என்னை நோக்கி அனுப்பி வைக்கிறார். கடவுளின் சொல்படி நான் மொத்தம் 48 பெண்களை திருமணம் செய்து கொள்ளவேண்டும். அதை செய்வேன்" என குறித்த நபர் கூறியுள்ளார்.

மேலும் தான் 280 ஆண்டுகள் வாழ்வேன் என கூறும் குறித்த நபர் அதன் பின்னர் இறந்து மீண்டும் மறுபிறவி எடுத்து அடுத்த 2,700 ஆண்டுகளுக்கு வாழ்வேன் என கூறுகிறார்.