பேரூந்தில்  தீ பரவியமைக்கான காரணம் வெளியாகியது ! 11 பேரின் நிலைமை கவலைக்கிடம்

Published By: Priyatharshan

21 Feb, 2018 | 10:28 AM
image

தனியார் பேரூந்தில் ஏற்பட்ட வெடிப்பையடுத்தே குறித்த பேரூந்தில் தீ பரவியுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

இந்நிலையில் குறித்த பேரூந்து முற்றாக எரிந்து நாசமாகியுள்ளது.

சம்பவத்தில் 19 பேர் படுகாயமடைந்த நிலையில் தியத்தலாவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். வைத்தியசாலையில்  அனுமதிக்கப்பட்டிருக்கும் 19 பேரில் 11 பேரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இச் சம்பவம், பண்டாரவளை – தியத்தலாவை பிரதான வீதி கஹாகொல்லை என்ற இடத்தில் இன்று காலை 5.20 மணிக்கு இடம்பெற்றுள்ளது.

பண்டாரவளையிலிருந்து அதிகாலை தியத்தலாவைக்கு சென்ற குறித்த பேரூந்து தியத்தலாவையில் பயணிகளை ஏற்றிக்கொண்டு ஹெபராவை – கிராந்துருகோட்டை என்ற இடத்திற்கு சென்று கொண்டிருந்த போதே, இவ்வெடிப்புச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குறிப்பிட்ட பேரூந்தின் சாரதிக்கு பின்னாலுள்ள 3 ஆவது ஆசனத்தில் ஏற்பட்ட புகையுடன் வெடிப்பு இடம்பெற்றுள்ளது.

வட பகுதியிலிருந்து இராணுவத்தினர் விடுமுறையில் தென்பகுதிக்கு வரும்போது யாழ்ப்பாணத்திலிருந்து தியத்தலாவைக்கு செல்லும் பேரூந்தில் வந்து தியத்தலாவையிலிருந்து மற்றைய பேரூந்தில் பயணிப்பது வழமையாகும்.

இந்நிலையில், இராணுவத்தினரும்  வழமைபோன்று குறித்த பேரூந்தில் பயணித்த போதே, இவ்வெடிப்புச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. 

இச்சம்பவம் குறித்து, பண்டாரவளை மற்றும் தியத்தலாவைப் பொலிசார் தீவிர புலன் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலதிக செய்திகளுக்கு பேரூந்தில் தீ ; காயமடைந்த 19 பேரில் 12 பேர் இராணுவத்தினர் !

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:05:57
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22
news-image

17 ஆமைகளை கடத்திய இருவர் காத்தான்குடி...

2024-04-19 15:33:40
news-image

முதலாளிமார் சம்மேளனத்துக்கு எதிராக இலங்கைத் தொழிலாளர்...

2024-04-19 15:24:08
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-19 14:28:17
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-19 14:22:06
news-image

அம்பாறையிலிருந்து அரிசி ஏற்றிச் சென்ற லொறி...

2024-04-19 14:17:56
news-image

லுணுகலை ஹொப்டன் பகுதியில் நீரில் மூழ்கி...

2024-04-19 14:03:38