தனியார் பயணிகள் பேரூந்தில் திடீரென ஏற்பட்ட தீயில் சிக்கி காயமடைந்த 19 பேரில் 12 பேர் இராணுவத்தினர் என பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்தில் காயமடைந்த அனைவரும் தியத்தலாவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

இச் சம்பவம் தியத்தல்லாவை, கஹகொல்ல பகுதியில் இன்று அதிகாலை 5 மணியளவில் இடம்பெற்றுள்ள நிலையில், தீ விபத்துக்கான காரணம் குறித்து இதுவரை கண்டறியப்படவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.

இன்று காலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த பேரூந்தில் திடீரென ஏற்பட்ட வெடிப்பையடுத்து பரவிய தீயில் சிக்கியே 19 பேரும் காயமடைந்துள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

இதேவேளை, இவ் அனர்த்தத்தில் 7 பேர் இராணுவத்தினர் எனவும் 5 பேர் விமானப்படையைச் சேர்ந்தவர்களெனவும் 7 பேர் பொதுமக்களனெவும் இரணுவப் பேச்சாளர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலதிக செய்திகளுக்கு பயணிகள் பேரூந்தில் வெடிப்பு, தீ ; 17 பேர் வைத்தியசாலையில் அனுமதி