வெற்­றி­ பெற்ற கட்சி உள்­ளூராட்­சி­ மன்­றங்­க­ளுக்கு பிர­தி­நி­தி­களை தெரிவு செய்யும் போது அர­சியல் நோக்­கத்­துடன் செயற்­ப­டாமல் மக்­க­ளுக்கு சேவைபு­ரியும் மனப்­பாங்­கு­டனும் ஈடு­பாட்­டு­டனும் செயற்­படும் உறுப்­பி­னர்­களை   தெரிவுசெய்ய வேண்டும் என தெரி­வித்­துள்ள மார்ச் 12 அமைப்பு, 25 சத­வீத பெண் பிர­தி­நி­தித்­து­வத்தை புறந்­தள்­ளி  செயற்­பட முற்­பட்டால் கடு­மை­யான விளை­வு­களை எதிர்­நோக்க நேரிடும் எனவும் எச்­ச­ரித்­துள்­ளது. 

உள்­ளூராட்­சி­ மன்­றங்­க­ளுக்­கான புதிய உறுப்­பி­னர்­களை தெரிவு செய்யும் நட­வ­டிக்­கைகள் எதிர்­வரும் 6 ஆம் திகதி இடம்­பெ­ற­வுள்ள  நிலையில் நேற்று செவ்­வாய்க்­கி­ழமை கொழும்பு சன­ச­மூக மத்­திய நிலை­யத்தில் இடம்­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்பின் போதே அவ் அமைப்பு மேற்­க­ண்டவாறு தெரிவித்தது.

இதன் போது  பெப்ரல் அமைப்பின் தலைவர் ரோஹன ஹெட்­டி­யா­ராய்ச்சி கூறுகை யில், 

உள்­ளூராட்­சி­ மன்­றங்­க­ளுக்­கான தேர்தல் முடி­வ­டைந்­துள்ள நிலை­யிலும் அது தொடர்­பான விமர்­ச­னங்கள் பல­வாறு வெளி­யா­கி­ய­வண்­ணமே உள்­ளன. இந்த தேர்தல் புதிய  தேர்தல் முறை­மை­யி­னூ­டாக இடம்­

பெற்று முடிந்­தமை மற்றும் வெற்­றி­பெற்ற கட்­சி­யி­லி­ருந்து மாந­க­ர­ சபை மற்றும் நகர சபை­க­ளுக்­கான உறுப்­பி­னர்­களை தெரிவு செய்வது தொடர்பில் சிக்­கல்கள் எழுந்­துள்­ளன. 

தேர்தல் இடம்­பெ­று­வ­தற்கு முன்­னை­ய காலப்­ப­கு­தி­க­ளி­லேயே கட்­சி­க­ளுக்கு தகு­தி­யா­ன­வர்­களை  வேட்­பாளர் பட்­டி­யலில் இணைத்து கொள்ளும் நட­வ­டிக்­கைகள் தொடர்பில் அறி­வு­றுத்­தப்­பட்­டி­ருந்­தன.  அதே­போன்று சகல கட்­சிளும் தமது தெரி­வா­ன­வர்கள் தொடர்­பான விப­ரங்­களை மக்­க­ளுக்கு அறி­விக்­கு­மாறு குறிப்­பி­டப்­பட்­டி­ருந்­தது. ஆனால் எந்­த­வொரு கட்­சியும் இது தொடர்பில்  கவனம் கொள்­ள­வில்லை.   இதனால் பிர­தான தேர்­தலில் வாக்­க­ளிப்­ப­தை­போன்றே மக்கள் வாக்­க­ளித்­துள்­ளனர். 

அதே­போன்று கட்­சி­களும் பொறுப்­பற்ற வகை­யி­லேயே தனது தேர்தல் நட­வ­டிக்­கை­களை மேற்­கொண்­டுள்­ளன. தேர்­த­லுக்கு முன்­ன­ரான பிர­சா­ரங்­களின் போதும் தேசிய பிரச்­சி­னையை மையப்­ப­டுத்­தியே   செயற்­பா­டு­களை முன்­னெ­டுத்திருந்­தன. இதன் விளை­வா­கவே மக்­களும் பிர­தான கட்­சி­களை மைய­மாக கொண்டு தனது வாக்­கு­களை பயன்­ப­டுத்தி கட்­சி­களின் விருப்­பங்­களை நிவர்த்தி செய்­துள்­ளனர். 

ஆனால் உறுப்­பி­னர்­களின் தெரிவு நட­வ­டிக்­கை­க­ளை­யா­வது மக்­களின் நலன் கருதி மேற்­கொள்­ளப்­பட வேண்டும். மாந­கர சபை பிர­தேச சபை மற்றும் நகர சபை­க­ளுக்­கான பட்­டியல்  உறுப்­பி­னர்கள் தெரி­வு­ செய்­யப்­படும் போது பொறுப்பு வாய்ந்த மக்­க­ளுக்கு சேவை­யாற்றக்­ கூ­டிய உறுப்­பி­னர்­களை தெரிவு செய்­வதில் கட்­சிகள் அனைத்தும் மிக அவ­தா­னத்­துடன் செயற்­படல் வேண்டும். தெரிவு செய்­யப்­படும் உறுப்­பி­னர்கள்   மக்­க­ளுடன் செயற்­ப­டு­வ­தினை மைய­மாக கொண்டே அவர்­களின் உண்­மை­யான தோற்றம் வெளிப்­படும். ஆகையால் மக்கள் மத்­தியில் நன்­ம­திப்பை வென்ற, கல்­வி­ மட்­டத்தில் சிறந்து விளங்கும் பொறுப்­பு­டனும் ஈடு­பாட்­டு­டனும் செயற்­படும் உறுப்­பி­னர்­களை தெரிவு செய்­வதில் சகல கட்­சி­களும் அவ­தா­னத்­துடன் செயற்­ப­ட­வேண்டும். இதன் மூலம் மக்கள் தேர்­த­லுக்­கான பிர­திப்­ப­லனை ஓர­ள­வா­வது அடைய முடியும். 

உள்­ளூ­ராட்சி மன்­றங்கள் சிறிய அர­சாங்கங்களாக கரு­தப்­ப­டு­கின்­றன.  உள்ளூர் மன்­றங்­களால் தமது  பிர­தே­சத்­துக்­கு­ரிய சகல முன்­னேற்ற நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்­­வ­தற்கான வாய்ப்­புக்கள் அதி­க­மாக காணப்­ப­டு­கின்­றன. எனவே உள்­ளூ­ராட்சி மன்­ற­ங்­க­ளுக்கு தெரிவு செய்­யப்­படும் உறுப்­பி­னர்­களும் பொறுப்­பு­டனும் முன்­னேற்ற சிந்­த­னையுடன்   செயற்படக்கூடிய தன்மை உடை­ ய­வ­ராக இருத்தல் வேண்டும். இதேபோன்று ஆண் பெண் வேறு­பா­டின்றி கட்­சிகள் தனது கட்சி சார்­பான உறுப்பி­னர்­களை தெரிவு செய்ய வேண்டாம் என்­றா­ர்.  மார்ச் 12 அமைப்பின் பேச்­சாளர் மஞ்­சுல கஜ­நா­யக்க உரையாற்­று­கையில்,

340 உள்­ளூராட்­சி­ மன்­றங்­க­ளுக்­கான பட்­டியல் உறுப்­பி­னர்­களை தெரிவு செய்­வது தொடர்­பான கலந்­துரை­யா­டல்கள் சகல கட்­சிக­ளிலும் இடம் பெற்று வரு­கின்­றன. மேலும் கட்­சிகள் தெரிவு செய்யும் தலை­வர்கள் சரி­யான பாதையில் சிந்­திப்­ப­வர்­களா  என்­பதைகட்­சிகள் சிந்­திக்க வேண்டும். ஊழல் செய்யும் தலை­வர்­க­ளையே மீண்டும் கட்­சிகள் மக்­க­ளுக்கு வழங்­கி­ வ­ரு­கின்­றன. 

இத்­தேர்­தலில் பிர­தான அம்சம் பெண்­க­ளுக்­கான அர­சியல் உரி­மையை பெறுதல் ஆகும்.  25 வீத பெண் பிர­தி­நி­திகள்   உள்­ளூராட்சி மன்றங்களுக்கு தெரிவு செய்­யப்­ப­டுதல் கட்­டா­ய­ப்ப­டுத்­தப்­பட்­டது. ஆனால் பெண் பிர­தி­நி­திகள் தொடர்பில் கவனம் செலுத்­து­வதில் கட்­சிகள் தவ­றி­ழைத்­துள்­ள­ளன. சட்­டத்தின் அடிப்­ப­டையில் பெண்­க­ளுக்கு அர­சியல் அதி­கா­ரத்தை  பெற்­றுத்­த­ருதல் மட்டுமின்றி உள்­ளூ­ராட்­சி ­மன்ற தலை­மைத்­த­வத்தை ஏற்கும் உரி­மை­களும் பெண் உறுப்­பி­னர்­களுக்கு வழங்­கப்­பட்­டுள்­ளன. இது தொடர்பில் சகல கட்சிகளும் கவனத்தை செலுத்துதல் வேண்டும்.

ஐக்கிய தேசிய கட்சி பெண் வேட்பாளர்கள் தொடர்பாக மிகவும் அவதானத்துடன் செயற்பட்டது.  ஆனால் அக்கட்சியிலுள்ள சில  அமைச்சர்களை பெண்களுக்கு தரப்பட்ட இந்த உரிமையினை பறிக்கும் வகையில் செயற்பட்டு வருகின்றனர். கட்சியின் தலைவர் என்ற வகையில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க இது தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும். அதேபோன்று சகல கட்சிகளும் தேசிய ரீதியில் பலம் வாய்ந்த கட்சியால செயற்பட வேண்டுமானால் பெண்களுக்கான பிரதிநிதித்துவத்தை சரியான முறையில் வழங்கினால் மாத்திரமே முடியும் என்றார்.