புலிகள் இருந்­த­வரை இந்­துமாக் கடலை எந்த நாட்­டாலும் கைப்­பற்ற முடி­ய­வில்லை. இன்று நிலைமை அப்­ப­டி­யல்ல. இந்­து­மாக்­கடல் சீனாவின் கட்­டுக்குள் சென்­று ­விட்­டது என்று தமிழர் தேசிய இயக்கத்தின் தலைவர் பழ.நெடுமாறன் தெரிவித்துள்ளார். தமி­ழீழ விடு­த­லைக்­கான எழுச்சி மாநாடு சென்னை சேப்­பாக்­கத்தில் உள்ள அண்ணா அரங்­கத்தில் நேற்று முன்தினம் நடை­பெற்­றது. மாநாட்டை மே17 இயக்கம் நடத்­தி­யது.

நான்கு கட்ட அமர்­வு­க­ளாக மாநாடு நடை­பெற்­றது. இம் ­மா­நாட்டை மலே­சி­யாவின் பினாங்கு மாநில துணை முதல்வர் ராம­சாமி தொடங்கி வைத்தார். இங்கு உரையாற்றுகையிலேயே நெடுமாறன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

ம.தி.மு.க பொதுச்­செ­ய­லாளர் வைகோ, கவிஞர் காசி ஆனந்தன், தமி­ழக வாழ்­வு­ரிமை கட்சித் தலைவர் வேல்­மு­ருகன், இந்­திய கம்­யூனிஸ்ட் கட்­சியின் தமிழ்­நாடு மாநில துணைச் செய­லாளர் வீர­பாண்­டியன், தமிழ்த் ­தே­சியப் பேரி­யக்கத் தலைவர் பெ.மணி­ய­ரசன், மனித நேய மக்கள் கட்சித் தலைவர் ஜவா­ஹி­ருல்லா, எஸ்.டி.பி.ஐ. கட்சித் தலைவர் தெஹலான் பாகவி, மனி­த­நேய ஜன­நா­யக கட்சித் தலைவர் தமிமுன் அன்­சாரி, இயக்­குநர் அமீர், தமி­ழக மக்கள் முன்­ன­ணியின் ஒருங்­கி­ணைப்­பாளர் பொழிலன், மணிப்பூர் மாநி­லத்தைச் சேர்ந்த சமூக செயற்­பாட்­டா­ளர்­களும், சட்டப் பேரா­சி­ரி­யர்­க­ளு­மான யொரெம்பே முடும் மற்றும் மாலேம் மங்கள் ஆகியோர் கலந்­து­கொண்டு தமி­ழீழ விடு­தலை பற்றி உரை­யாற்­றி­னார்கள்.

மாநாட்டில் பேசிய கவிஞர் காசி ஆனந்தன், "தமி­ழீ­ழத்தை மீட்­டெ­டுக்க வேண்­டு­மானால், உலகம் முழு­வதும் இருக்கும் தமிழ் அமைப்­புகள் ஒன்று சேர்ந்து போராட வேண்டும். சாதி, மதம் என்­பதை மறந்து நாம் அனை­வரும் ஒரே இனம் என்ற எண்­ணத்தில் போரா­டினால் மட்­டுமே தமி­ழீழம் சாத்­தி­ய­மாகும்" என்றார்.

தமி­ழக வாழ்­வு­ரிமை கட்சித் தலைவர் வேல்­மு­ருகன் பேசி­ய­போது, "ஈழத்தில் நடந்­தது இனப்­ப­டு­கொலை என்று ஏற்க மறுப்­ப­வர்­களும், புலி­க­ளுக்கு ஆத­ரவு அளிக்­கா­த­வர்­களும் இந்த தமிழ் மண்ணில் நிலைத்து நிற்க முடி­யாது. எம்­மினம் அழிந்­த­போதும், எம்­மி­னத்தை பிற மாநிலக்­கா­ரர்கள் தாக்­

கி­ய­ போதும் வாய் திறக்­கா­த­வர்கள் எல்லாம் இன்று எம்­மி­னத்தை ஆள நினைக்­கி­றார்கள். அவர்­க­ளுக்கு என்ன தைரியம் இருக்­கி­றது? வெட்­கப்­பட்­டு கொள் தமி­ழி­னமே" என்றார்.

மாநாட்­டில்­ தி­ரு­மு­ருகன் காந்தி பேசி­ய­தா­வது" 'வெல்லும் தமி­ழீழம்' என்ற இந்த முழக்­கத்தைச் சொல்­லும் ­போது இந்­திய அரசு அஞ்­சு­மே­யானால், மீண்டும் மீண்டும் சொல்வோம் 'வெல்லும் தமி­ழீழம்' என்று. இன்னும் எத்­தனை காலத்­துக்­குதான் இனப்­ப­டு­கொலை நடந்­து­ விட்­டது என பேசப்­போ­கிறோம். வெறும் சமூக வலை­ த­ளங்­களில் படங்­களை பகிர்­வ­தோடு நம்­மு­டைய கடமை நின்­று­விடக் கூடாது. அடுத்து என்ன செய்தால் தமி­ழீழம் மலரும் என்று சிந்­தித்து அடுத்­த­ கட்­டத்­துக்கு செல்­ல­வேண்­டிய கட்­டா­யத்தில் நாம் இருக்­கிறோம். எப்­படி காஷ்மீர் பிரச்­சினை இந்­தி­யாவின் விவாதப் பொரு­ளாக மாறி­யதோ? அது­போல் தமி­ழீ­ழமும் இந்­தி­யாவின் விவா­தப் ­பொ­ரு­ளாக மாற வேண்டும். அதற்­கான முயற்­சியை நாம் தான் எடுக்க வேண்டும். இந்­தி­யா­வி­லுள்ள தேசிய இனத் தலை­வர்கள், பல தேசிய இன­மக்கள், இந்­திய ஊடகம் என அனை

த்துத் தரப்­பி­னரும் தமி­ழீ­ழத்தை விவாதப் பொரு­ளாக எடுக்க வேண்டும். அப்­போ­துதான் இந்­திய மக்­க­ளுக்கு இலங்­கையில் நடந்த இனப்­ப­டு­கொலை தெரியும். இந்­தியா என்ற ஒரு நாடு இனத்­துக்கு செய்த மிகப்­பெ­ரிய துரோ­கத்தை இந்­திய மக்கள் மட்­டு­மல்ல... தெற்­கா­சிய நாடு­களில் உள்ள அனைத்து மக்­களும் தெரிந்­து­ கொள்ள வேண்டும். கடந்த 9 வரு­டங்­க­ளாக தமி­ழர்கள் குற்ற உணர்ச்­சியில் வாழ்ந்­து­ கொண்­டி­ருக்­கிறோம். இந்­தியா முழு­ வதும் தமி­ழீ­ழத்தை விவா­தப் ­பொ­ரு­ளாக மாற்ற முடி­ய­வில்லை. இது நடக்க வேண்டும். அப்­போ­துதான் இந்­தி­யா­வுக்கு எதி­ராக தமி­ழி­னத்­துக்கு ஆத­ர­வாக பல தேசிய இனங்கள், பல நாடுகள் ஒன்று சேரும். செனல்- 4 எடுத்த ஆவ­ணப்­ப­டத்தை தவிர நம்­மிடம் என்ன ஆவணம் இருக்­கி­றது? நம்­மிடம் திற­மை­யான கலை­ஞர்கள் இல்­லையா? லுஸ்கர் வாங்கும் அள­வுக்கு திரைத்­து­றையில் சாதித்து இருக்­கிறோம். ஆனால், நம்­மினம் பற்­றிய ஒரு ஆவ­ணப்­படம் இல்லை. வர­லாற்றைத் தெரிந்­து­கொண்டும் நாம் அதனை ஆவ­ணப்­ப­டுத்­த­வில்லை என்றால், எவனோ ஒருவன் அவன் விருப்­பத்­துக்குத் தமி­ழி­னத்­துக்கு தலை­யங்கம் எழு­தி­ வி­டுவான். தமி­ழ­கமே எழுச்சி கொள். இல்­லை­யென்றால் இன்று தமி­ழீ­ழத்­துக்கு நடந்­தது, நாளை தமிழ் நாட்­டுக்கும் நடக்கும்!" என்று முழங்­கினார்.

பின்னர் பேசிய பழ.நெடு­மாறன் "புலிகள் இருந்­த­வரை இந்­துமாக் கடலை எந்த நாட்­டாலும் கைப்­பற்ற முடி­ய­வில்லை. இன்று நிலைமை அப்­ப­டி­யல்ல. இந்­து­மாக்­கடல் சீனாவின் கட்­டுக்குள் சென்­று­விட்­டது. இந்­தி­யாவில் டில்­லியில் இருக்கும் புத்­தி­சா­லி­களே தெரிந்­து­ கொள்­ளுங்கள். இந்­தியா மிகப்­பெரும் ஆபத்தில் இருக்­கி­றது. பாகிஸ்தான், நேபாளம், வங்­காளம், இலங்கை போன்ற நாடுகள் ஏற்­க­னவே சீனாவின் ஆதிக்­கத்­துக்குள் சென்­று­விட்­டது. தற்­போது இந்திய பெருங்கடலும் அவர்களின் ஆதிக்கத்துக்குள் செல்லவிருக்கிறது. இதுமட்டும் நடந்து விட்டால் இந்தியாவுக்கு மட்டுமல்ல... தெற்காசிய நாடுகளுக்கே மிகப்பெரிய அச்சுறு

த்தல். இந்தக் கடல் நம்மிடம் இருக்கும் வரைக்குமே இந்தியாவுக்குப் பாதுகாப்பு. அதற்கு தமிழீழம் அமைய வேண்டும். அப்போதுதான் அது சாத்தியம்." என்றார்.