பொரளை, கொட்டா வீதியில் உள்ள புகையிரதக் கடவைக்கு அருகில், இன்று (20) மாலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் காயமடைந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

புகையிரதக் கடவைக்கு அருகில் சென்றுகொண்டிருந்த காரின் மீது, மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் இருவர் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்ட பின் தப்பிச் சென்றனர்.

இதில் படுகாயமுற்ற கார் சாரதி கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

காயமடைந்தவர் கொட்டாஞ்சேனையைச் சேர்ந்த 32 வயதுடையவர் என்று தெரியவந்துள்ளது. எனினும் தாக்குதலுக்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை.

பொரளை பொலிஸார் சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.