இந்தியா - ஐதராபத்தில் உள்ள தனியார் கல்லூரியில் எம்.பி.ஏ. படித்து வந்த மாணவி நேற்று  நண்பருடன் வீடியோ கோலில் கோலில்  பேசிக்கொண்டிருந்த போது மாணவி  சமீபத்தில் ஒரு திருமணத்திற்கு சென்றது தொடர்பாக இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இதில் கோபமடைந்த மாணவி  தற்கொலை செய்து கொள்வதாக மிரட்டியுள்ளார். வீடியோ கோலில் பேசிக்கொண்டிருக்கும் போதே தூக்கிட்டு தற்கொலையும் செய்து கொண்டுள்ளார்.

இதனை பார்த்த நண்பர் உடனடியாக மாணவி தங்கியிருந்த விடுதிக்கு வந்து கதவை உடைத்து தூக்கில் தொங்கிய மாணவியை உடனடியாக கீழே இறக்கி வைத்தியசாலைக்கு தூக்கிச் சென்று அனுமதித்துள்ளார்.

மாணவியை சோதனை செய்த வைத்தியர்கள் அவர் இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். அவருடைய உடல், பிரேத பரிசோதனைக்காக அரசு வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

மாணவி தற்கொலை குறித்து பெற்றோர் அளித்த முறைப்பாட்டின் அடிப்படையில் பொலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.