பொகவந்தலாவ - வானகாடு தோட்டத்தில் பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய தாக கூறப்படும் சந்தேக நபர் எதிர்வரும் 6ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு ஹட்டன் நீதிமன்ற நீதவான்  டி.சரவனராஜா உத்தரவிட்டுள்ளார்.

குறித்த சந்தேக நபரை இன்று ஹட்டன் நீதவான் முன்னிலையில் ஆஜபடுத்தபட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கபட்டது.

கடந்த ஜனவரி மாதம் 8ஆம் திகதி காதல் உறவுமுறையில் தலைமறைவான 18 வயது இளைஞனும் 16 வயது யுவதியும் நேற்று உடபுஸ்ஸலாவ பகுதியில் உள்ள இளைஞனின் உறவினர்கள் வீட்டில் வைத்து கைது செய்யபட்டுள்ளதாக பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்தனர் .

சிறுமியின் பெற்றோர்களால் பதிவு செய்யபட்ட முறைபாட்டுக்கமைய குறித்த சிறுமியை தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்ட பொகவந்தலாவ  பொலிஸார் 16 வயது சிறுமியை உடபுஸ்ஸலாவ பகுதியில் உள்ள சந்தேகநபரின் உறவினர்  வீட்டில் இருந்து  மீட்டுள்ளதாகவும், சந்தேகநபர் கைது செய்யபட்டதாகவும் இவர்கள் இருவரும் 43 நாட்கள் தலைமறைவாகியிருந்தாகவும் பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரனைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

குறித்த 16 வயது சிறுமி சட்டவைத்திய அதிகாரியின் வைத்திய பரிசோதனைக்காக டிக்கோயா கிழங்கன் ஆதார வைத்தியசாலையில்  அனுமதிக்கபட்டுள்ளதாக பொலிஸார் மேலும் குறிப்பிட்டனர் .

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரனைகளை பொகவந்தலாவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடதக்கது.