பட்டம் விடும் சுவாரசியத்தில் பாதுகாப்புச் சுவர் இல்லாத கிணற்றில் விழுந்த பதினைந்து வயதுச் சிறுவன் பரிதாபகரமாக பலியாகினான். இச்சம்பவம் சாவகச்சேரியில் நேற்று (19) மாலை இடம்பெற்றுள்ளது.

மற்றொரு எட்டு வயதுச் சிறுவனுடன் சேர்ந்து பட்டம் விட்டுக்கொண்டிருந்த சிறுவன், ஆகாயத்தில் பறந்துகொண்டிருந்த பட்டத்தைப் பார்த்தபடியே ஓடியதில், பாதுகாப்புச் சுவர் இல்லாத கிணற்றில் தவறி விழுந்தான்.

இதைக் கண்ட எட்டு வயதுச் சிறுவன் உடனடியாக ஓடிச் சென்று கிணற்றில் விழுந்த சிறுவனின் பெற்றோரையும் அயலவர்களையும் அழைத்துச் சென்றான்.

கிணற்றில் இருந்து உயிருடன் மீட்கப்பட்டபோதும், குறித்த சிறுவன் சாவகச்சேரி பொது வைத்தியசாலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தான்.