நாட்டுக்குத் தேவையான துரித பொருளாதார முகாமைத்துவ மாற்றங்களுடனான புதிய நிகழ்ச்சித்திட்டம் தேசிய பொருளாதார சபையினூடாக அடுத்த வாரம் முன்வைக்கப்படவுள்ளது. 

தேசிய பொருளாதார சபை இன்று முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் தலைமையில் கூடியபோதே இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது. 

பொருளாதார முகாமைத்துவத்தின்போது நாட்டுக்குத் தேவையான துரித மாற்றங்கள் மற்றும் தீர்மானங்கள், அவற்றை நடைமுறைப்படுத்த வேண்டிய குறுங்கால, இடைக்கால மற்றும் நீண்டகால நிகழ்ச்சித்திட்டங்கள் குறித்து விரிவாகக் கலந்துரையாடப்பட்டது. 

8வது முறையாக கூடியிருக்கும் தேசிய பொருளாதார சபை நாட்டின் தேசிய பொருளாதாரத்தைப் பலப்படுத்துவதற்குத் தேவையான தீர்மானங்களை மேற்கொள்வதற்காக ஜனாதிபதியினால் கடந்த வருடம் அமைக்கப்பட்டது.