சிவனொளிபாதமலைக்கு போதை பொருளுடன் சென்ற சந்தேக நபர்கள்  27 பேருக்கும் 1 லட்சத்து 35 ஆயிரம் ருபா தண்டம் விதிக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்படவர்களை  ஹட்டன்  மாவட்ட நீதிமன்றில் நேற்று ஆஜர்படுத்தியபோதே நீதவான் இவ்வாறு தண்டம் விதித்தார். 

தியகல சோதணை சாவடியில் கடந்த 17ஆம் திகதி  கஞ்சா மற்றும் ஹெரோயின் போதை பொருளுடன் வந்த கம்பஹா.கொழும்பு.குருனாகல் பிரதேசத்தை சேர்ந்த இளைஞர்கள் ஹட்டன் பிராந்திய குற்றத்தடுப்பு பிரிவினரால் பொலிஸ் மோப்பநாயின் உதயுடன் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட  மேற்படி இளைஞர்கள் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தியதையடுத்து  குற்றத்தை ஏற்றுக்கொண்ட நிலையிலே 1லட்சத்து 35 ஆயிரம் ருபா தன்டம் விதித்து ஹட்டன் மாவட்ட நீதிமன்ற நீதவான் டி சரவனராஜா தீர்பளித்தார்.