இன்றைய இளந்தலைமுறையினரிடத்தில் தன்னுடைய பேச்சுகளால் பிரபலமானவர் தொகுப்பாளரான மிர்ச்சி விஜய். இவர் நட்புன்னா என்னானு தெரியுமா படத்தில் இரண்டு பாடல்களையும் எழுதியிருக்கிறார். அதில் ஒரு பாடலை பாடவும் செய்திருக்கிறார். 

இது குறித்து விஜய் பேசும் போது,‘ இசையைமப்பாளர் தரன்குமார் மற்றும் இயக்குநர் சிவாவிடம் நட்பாக இருந்தது தான் இதற்கு காரணம். தரண்குமாரிடம் இரண்டு பாடல்களை எழுதியிருக்கிறேன் என்று எம்முடைய வீட்டில் உள்ளவர்களிடம் சொன்னேன். அவர்களோ உனக்கு இரண்டு வார்த்தையை சேர்த்து எழுத தெரியாது. நீ பாட்டு எழுதியிருக்கிறயா..? என்று பேசினார்கள். ஆனால் அவர்கள் இன்றைய தினம் எம்முடைய பாடல்களை நானே பாடுவதை கேட்கும் போது உண்மையில் சந்தோஷப்பட்டார்கள்.’ என்றார்.

தொகுப்பாளர், பாடகர், பாடலாசிரியர், சமூக சேகவர் என பன்முகத்திறமையுடன் திகழும் விஜய் விரைவில் கதையின் நாயகனாகவும் நடித்து திரையுலகில் தன்னுடைய சேவையைத் தொடர்வார் என்கிறார்கள் அவரது ரசிகர்கள்.