இன்றைய திகதியில் இளைய தலைமுறையினரின் விருப்பத்திற்காகவோ அல்லது அவர்களின் சூழலுக்காகவோ பெரியவர்களும் கொழுப்பு சத்து மிகுந்த உணவை சாப்பிடுகிறார்கள். இதனால் பெரியவர்கள் மட்டுமல்லாமல் இளைய தலைமுறையினரும் மலச்சிக்கலுக்கு ஆளாகிறார்கள். மலச்சிக்கல் ஆரோக்கிய கேட்டிற்கு நுழைவு வாயில். எப்படி ஒருவருக்கு சர்க்கரைநோயிற்கு ஆளாகிவிட்டால் அனைத்து வகையினதான நோயிற்கும் ஆட்படுகிறார்களோ அதே போல் மலச்சிக்கல் ஏற்பட்டாலும் அனைத்து வகையினதான ஆரோக்கிய பாதிப்பிற்கும் ஆளாகிவிடுகிறார்கள்.

இதனால் மலச்சிக்கலை மட்டும் வரவழைத்துக் கொள்ளாதீர்கள். இதற்காக இதனை எப்படி வராமல் தடுத்துக் கொள்வது என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள்.

தினமும் காலையில் நடைபயிற்சி அல்லது ஜாக்கிங் எனப்படும் மெல்லோட்டம். இதில் நீங்கள் 8 போல் நடந்தாலும் சரி அல்லது 8 போட்டு அதில் மெல்லோட்டம் போனாலும் சரி. ஆனால் தினமும் இதைத் தவறாமல் 30 நிமிட காலத்திற்கு செய்யவேண்டும். அத்துடன் காலையில் எழுந்தவுடன் வெதுவெதுப்பான தண்ணீரை அருந்துங்கள் அல்லது எப்போதும் வெந்நீரை அருந்தும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். தினமும் போதிய அளவிற்கு தண்ணீர் குடிக்கவேண்டும். அத்துடன் நார்ச்சத்து மிக்க உணவுகளை சென்னா, முந்திரி பருப்பு, கீரை, கிவி பழங்கள் ஆகியவற்றை உணவில் சேர்த்துக் கொள்ளவேண்டும். ஒரு சிலர் மருத்துவர்களின் ஆலோசனையைப் பெற்று கோப்பியையும் அருந்தலாம்.

டொக்டர் சந்திரசேகரன்

தொகுப்பு அனுஷா.