44ஆவது தேசிய விளை­யாட்டு விழாவின் ஒரு அங்­க­மாக நடை­பெற்ற தேசிய நகர்­வல ஓட்டப் போட்­டியில் ஆண்கள் பிரிவில் சந்­தி­ர­தாசன் மற்றும் பெண்கள் பிரிவில் ஹிமாஷா மது­ஷானி ஆகியோர் தங்கப் பதக்கம் வென்­றனர்.

இவ்­ ஆண்­டுக்­கான தேசிய விளை­யாட்டு விழா எதிர்வரும் செப்­டெம்பர் மாதம் இரத்­தி­ன­பு­ரியில் நடை­பெ­ற­வுள்­ளது.

இதற்கு முன்­னோட்­ட­மாக தேசிய நகர்­வல ஓட்டப் போட்டி கடந்த ஞாயிற்­றுக்­கி­ழமை நுவ­ரெ­லியா கொல்ப் கழக புல் ­தரை மைதா­னத்தில் நடை­பெற்­றது.

இதில் ஆண்­க­ளுக்­கான போட்டிப் பிரிவில் மத்­திய மாகாண வீரர் எஸ்.சந்­தி­ர­தாசன் பந்­தயத் தூரத்தை 33.25 வினா­டி­களில் கடந்து தங்­கப்­ப­தக்­கத்தை வென்றார். இதில் இரண்டாம் இடத்தை மத்­திய மாகாண வீரர் சம­ர­ஜீ­வவும் (33.31வினாடி), மூன்­றா­மி­டத்தை ஊவா மாகாண வீரர் எரந்­தவும் (33.33 வினாடி) வென்­றனர்.

இதில் பெண்கள் பிரிவில் கிழக்கு மாகாண வீராங்­கனை ஹிமாஷா மது­ஷானி தங்கப் பதக்­க த்தை வென்றார். இவர் பந்­தயத் தூரத்தை 39.49 வினா­டிகளில்  கடந்தார். அதேபோல் இரண்­டா­மி­டத்தை ஊவா மாகாண வீராங்­கனை ஷியா­மலி அனு­ஷாவும் (40.19 வினாடி), மூன்­றா­மி­டத்தை மத்­திய மாகாண வீராங்­கனை அனு­ர­தியும் (40.19 வினாடி)வென்­றனர்.

44ஆவது தேசிய விழாவின் முதல் அங்­க­மாக நடை­பெற்ற இப்­போட்­டியில் அனைத்து மாகா­ணங்­க­ளையும் உள்­ள­டக்­கிய 82 வீரர்களும், 47 வீராங்கனைகளும் கலந்துகொண்டனர்.