உள்­ளூ­ரா ட்சி மன்றத் தேர்­தலின் பின்னர் ஏற்­பட்­டி­ருக்கும் நிலை­வ­ரத்தை அடிப்­ப­டை­யாகக்­கொண்டு ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தனது பத­வி­யி­லி­ருந்து இரா­ஜி­னாமா  செய்து, ஜனா­தி­பதித் தேர்­தலை நடத்த முடியும். அதன் மூலம் மக்­களின் அபிப்­பி­ரா­யத்தை அறிந்து கொள்ள முடியும். அல்­லது பாரா­ளு­மன்­றத்தைக் கலைத்து பொதுத்­தேர்­தலை நடத்த முடியும். எனினும் மக்­களின் அபிப்­பி­ரா­யத்­திற்கு மதிப்­ப­ளிக்­காது அர­சாங்கம் பய­ணிக்க முற்­ப­டு­மாயின் அப்­ப­ய­ணத்தை மாற்­று­வ­தற்­கான வழி எமக்குத் தெரியும் என தேசிய சுதந்­திர முன்­ன­ணியின் தலை­வரும் கூட்டு எதிர்க்­கட்­சியில் அங்கம் வகிக்கும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான விமல் வீர­வன்ச தெரி­வித்தார்.

கூட்டு எதிர்க்­கட்சி ஏற்­பா­டு­செய்த ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்பு நேற்று பாரா­ளு­மன்றக் கட்­டிடத் தொகு­தியில் நடை­பெற்­றது. அதில் கலந்­து­கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் இதைனத் தெரி­வித்தார். 

அவர் மேலும் குறிப்­பி­டு­கையில்,

உள்­ளூ­ராட்சி மன்றத் தேர்­தலின் பின்னர் மத்­திய அர­சாங்­கத்தில் தளம்பல் நிலை ஏற்­பட்­டுள்­ளது. அர­சாங்கம் கடந்த மூன்று ஆண்­டுகள் முன்­னெ­டுத்த கொள்­கைத்­திட்­டங்­க­ளுக்கு எதி­ரா­கவே மக்கள் தேர்­தலில் ஸ்ரீலங்கா பொது­ஜன பெரு­மு­ன­விற்கு அதி­க­ள­வி­லான வாக்­கு­களை வழங்­கி­யுள்­ளனர். எனினும் அவ்­வா­ணைக்கு பின்­னரும் நல்­லாட்சி அர­சாங்கம் தொடர்ந்து செல்ல முடி­யு­மென நினைக்­கு­மாயின் அது இன்னும் விளை­வு­களை ஏற்­ப­டுத்தக் கூடி­யது. 

ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­விடம் ஐக்­கிய தேசியக் கட்­சியை அர­சாங்­கத்­தி­லி­ருந்து வில­கு­மாறும், ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சி­யி­லி­ருந்து பிர­தமர் ஒரு­வரை நிய­மிக்­கு­மாறும் அர­சாங்­கத்­திற்கு நாம் எதிர்க்­கட்­சி­யி­லி­ருந்து ஒத்­து­ழைப்பு வழங்­கு­வ­தா­கவும் தெரி­விதோம்.

ஆயினும் எமது குறித்த வேண்­டு­கோளை ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன ஏற்­றுக்­கொள்­ளாது தொடர்ந்தும் ஐக்­கிய தேசியக் கட்­சி­யுடன் இணைந்து ஆட்­சியை முன்­னெ­டுப்­ப­தற்கு எதிர்­பார்த்­துள்ளார். ஐக்­கிய தேசியக் கட்சி கடந்த மூன்று ஆண்­டு­களில் நாட்டின் பொரு­ளா­தா­ரத்தை சீர் குலைத்து விட்­ட­தாக ஜனா­தி­ப­திதான் குறிப்­பிட்டார். எனினும் அவர் மீண்டும் அத்­த­ரப்­பிற்கு ஆட்­சியை வழங்கி எஞ்­சி­யுள்ள பொரு­ளா­தா­ரத்­தையும் சீர்­கு­லைப்­தற்கு வழி­வ­குக்­க­வுள்ளார்.

மேலும் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக்ஷ அர­சி­ய­ல­மைப்பின் 18 ஆம் திருத்­தத்தைக் கொண்டு வந்து காலம் பூரா­கவும் அதி­கா­ரத்தில் இருப்­ப­தற்கு எதிர்­பார்ப்­ப­தாக சிவில் சமூகப் பிர­தி­நி­திகள் குற்­றம்­சாட்­டினர். எனினும் அர­சி­ய­ல­மைப்பின் 19 ஆம் திருத்­தத்தின் பிர­காரம் பிர­த­மரை விலக்க முடி­யாத நிலை ஏற்­பட்­டுள்­ளது. பிர­த­மரை விலக்­கு­வது தொடர்பில் ஜனா­தி­பதி உயர்­நீ­தி­மன்­றிடம் விளக்கம் கோரி­யுள்ளார். அந்­த­ள­விற்கு நாட்டின் ஆட்சி முறையை நல்­லாட்சி அர­சாங்கம் சிக்­க­லுக்­குட்­ப­டுத்­தி­யுள்­ளது.

எனினும் ஜனா­தி­பதி தனது பத­வி­யி­லி­ருந்து இரா­ஜி­னாமாச் செய்து, ஜனா­தி­பதித் தேர்­தலை நடத்த முடியும். அதன் மூலம் மக்­களின் அபிப்­பி­ரா­யத்தை அறிந்து கொள்ள முடியும். அல்­லது பாரா­ளு­மன்­றத்தைக் கலைத்து பொதுத்­தேர்­தலை நடத்த முடியும். ஆயினும் அவற்றை மேற்­கொள்­ளாது நாட்டை ஸ்திமற்ற நிலைக்கு கொண்­டு­செல்­கின்­றனர். நாட்டின் பொரு­ள­தா­தரம் நாளுக்கு நாள் வீழச்சி கண்டு செல்­கி­றது.

அத்­துடன் எதிர்க்­கட்­சித தலைவர் இரா. சம்­பந்­த­னுக்கு எதிர்க்­கட்சித் தலைமை வகிப்­ப­தற்­கான தார்மீகம் இல்லை. சட்ட ரீதியாகப் பார்தால் எதிர்க்கட்சித் தலைமை முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவிற்கு கிடைக்க வேண்டும். அது தொடர்பில்கூட அரசாங்கம் கவனம் செலுத்தவில்லை. 

ஆகவே அரசாங்கம் மக்களின் அபிப்பிராயத்திற்கு மதிப்பளிக்காது தான்தோன்றித் தனமாக பயணிக்குமாயின் அப்பயணத்தை திருப்புவதற்கான வழி தமக்குத் தெரியும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.