நல்­லாட்சி  தேசிய அர­சாங்­கத்தில்  நெருக்­க­டிகள்  ஏற்­பட்­டுள்ள போதிலும்  சிறி­லங்கா சுதந்­தி­ரக்­கட்சி  தனித்து அர­சாங்­கத்தை அமைக்­கப்­போ­வ­தாக கூறி­வந்த நிலை­யிலும் ஐக்­கிய தேசி­யக்­கட்­சியின்  தலை­வரும் பிர­த­ம­ரு­மான  ரணில் விக்­ர­ம­சிங்க   தனது பிர­தமர் பத­வியை தக்­க­வைத்­துக்­கொண்டார்.    

பிர­தமர் பத­வியில் ரணில் விக்­கி­ர­ம­சிங்க பத­வியில் நீடிப்­ப­தற்கு ஐக்­கிய தேசி­யக்­கட்­சி­யி­னதும் ஐக்­கிய தேசிய முன்­ன­ணி­யி­னதும் உறுப்­பி­னர்கள் முழு­மை­யான   ஆத­ரவை  வெளி­யிட்­டி­ருக்­கின்­றனர்.  தனித்து ஆட்­சி­ய­மைப்­ப­தற்கு   சுதந்­திரக் கட்சி  கடு­மை­யாக  முயற்­சித்­த­போ­திலும்   அந்த முயற்சி இறு­தியில் கைவி­டப்­பட்­டுள்­ளது. 

எனவே ஐக்­கிய தேசி­யக்­கட்சி  தாம் பெரும்­பான்­மை­யுடன் இருப்­ப­தா­கவும்   சுதந்­தி­ரக்­கட்­சியின் பக்­கத்தில் யாருக்­கா­வது பிர­தமர் பத­விக்கு   ஆசை இருந்தால் அவர்   பெரும்­பான்­மையை நிரூ­பிக்­க­வேண்­டி­யது  அவ­சியம் என்றும் கூறி­வ­ரு­கின்­றது. 

எவ்­வா­றெ­னினும் ஐக்­கிய  தேசி­யக்­கட்­சி­யினர் இந்த நிலைமை தொடர்பில்  தொடர்ந்து ஆராய்ந்து வரு­கின்­றனர்.  நேற்று முன்­தி­னமும்   ஐக்­கிய தேசி­யக்­கட்­சியின் முக்­கி­யஸ்­தர்­க­ளுடன்   பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க இது தொடர்பில் கலந்­து­ரை­யா­டி­யி­ருந்தார். 

மேலும்  தான் சபா­நா­யகர் கரு ஜய­சூ­ரி­ய­வையும் இணைத்­துக்­கொண்ட  ஜனா­தி­பதி  மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வுடன்  நடத்­திய பேச்­சு­வார்த்தை தொடர்­பிலும்   எடுத்­து­ரைத்­தி­ருந்தார்.  நல்­லாட்சி அர­சாங்கம் பல­மாக இருக்­கின்­றது என்றும் அது தொடரும் என்றும் பிர­தமர் கூறி­யி­ருந்தார்.  அதா­வது ஜனா­தி­ப­தி­யு­ட­னான இந்த சந்­திப்­பின்­போது  நம்­பிக்கை இல்லாப் பிரே­ரணை  கொண்­டு­வந்து தனக்­கெ­தி­ராக   பிரே­ரணை நிறை­வேற்­றப்­பட்டால் தான் பதவி வில­கு­வ­தா­கவும்   அதனை விடுத்து  எந்தக் கார­ணத்­திற்­கா­கவும் பதவி விலகப் போவ­தில்லை என்றும் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தெரி­வித்­த­தாக கூறப்­ப­டு­கின்­றது. 

 கடந்த 10 ஆம் திகதி நடை­பெற்ற  உள்­ளூ­ராட்சி மன்றத் தேர்­தலில் எதிர்­பா­ரா­த­வி­த­மாக   முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக்ஷ தலை­மை­யி­லான சிறி­லங்கா பொது­ஜன பெர­முன வெற்­றி­யீட்­டி­யது.  ஐக்­கிய தேசி­யக்­கட்சி இரண்டாம் இடத்­திற்கும்  சிறி­லங்கா சுதந்­தி­ரக்­கட்சி மூன்றாம் இடத்­திற்கும் தள்­ளப்­பட்­டி­ருந்­தன. தேர்தல் முடி­வு­களை அடுத்து  தேசிய அர­சாங்­கத்தில்  பாரிய நெருக்­கடி நிலை ஏற்­பட்­டது.  குறிப்­பாக  ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன  பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவை பதவி வில­கு­மாறு  கோரி­ய­தா­கவும்  அவர் அதனை மறுத்­து­விட்­ட­தா­கவும் தெரி­விக்­கப்­பட்­டது. 

இதனையடுத்தே ஐக்கிய   தேசியக்கட்சியும் சிறிலங்கா சுதந்திரக்கட்சியும் தனித்து ஆட்சி  அமைப்பதற்கு நடவடிக்கை எடுத்திருந்தன. எனினும்  தற்போது ஐக்கிய தேசியக்கட்சிக்கு சாதகமான  அரசியல் சூழல்  காணப்படுகின்றது. இந்நிலையில்   பல்வேறு  சர்ச்சைகளுக்கு  பின்னர் தேசிய அரசாங்கம் நீடிக்கின்றது.