நாட்டிற்கு சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட சிகரெட் தொகையுடன் சந்தேக நபரொருவர் விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். 

குறித்த சிகரெட் தொகையை சந்தேகநபர் சிங்கப்பூரில் இருந்து  சட்டவிரோதமாக இலங்கைக்கு கொண்டுவந்துள்ளதாக சுங்கப்பிரிவினர் தெரிவித்துள்ளது,

சந்தேகநபரிடமிருந்து 8 இலட்சம் ரூபா பெறுமதியான 16,000 சிகரெட்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

இதேவேளை, கைப்பற்றப்பட்ட சிகரெட் தொகை அரசுடைமையாக்கப்பட்டுள்ளதுடன் 50 ஆயிரம் ரூபா தண்டப்பணம் விதித்து சந்தேக நபர் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக சுங்கப் பிரிவினர் மேலும் தெரிவித்தனர்.