2 கிராம் ஹெரோயினுடன் பிடிபட்ட நபர் மேலும் பல கொள்ளைகளுடன் தொடர்பு

Published By: Priyatharshan

19 Feb, 2018 | 07:31 PM
image

வவுனியா தாண்டிக்குளம் பகுதியில் வைத்து கடந்த 6 ஆம் திகதி ஒருவரைக் கைது செய்த பொலிசார் அவரிடமிருந்து இரண்டு கிராம் ஹொரேயினைக் கைப்பற்றியிருந்தனர். இதையடுத்து அவரிடம் மேலதிக விசாரணைகள் மேற்கொண்டபோது பல சம்பவங்கள் வெளியாகியுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக பொலிசார் மேலும் தெரிவிக்கையில்,

கடந்த 6 ஆம் திகதி இரவு யாழ்ப்பாணத்திலிருந்து சொகுசு வேனில் கொழும்பு சென்ற யாழ். புங்குடுதீவு பகுதியைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான 31 வயதுடைய நபர் ஒருவரிடம் சோதனை மேற்கொண்டபோது அவரது உடமையிலிருந்து இரண்டு கிராம் ஹொரோயினை மீட்டுள்ளதாகவும் இதையடுத்து அவரிடம் மேலதிக விசாரணைகள் மேற்கொள்வதற்காக வவுனியா பொலிஸ் நிலையத்தில் தடுத்துவைக்கப்பட்டு விசாரணைகள் மேற்கொண்டுவந்த நிலையில் குறித்த சந்தேக நபர் திருட்டுச் சம்பவத்துடனும் பெண்கள் தனிமையிலிருக்கும் வீடுகளில் திருடி வந்ததும் தெரியவந்துள்ளது.

இதையடுத்து பொலிஸ் நிலையத்தில் 7நாட்கள் தடுத்து வைக்கும் அனுமதியை நீதிமன்றத்திடம் பெற்று மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டபோது யாழ்ப்பாணம், செட்டிகுளம், மன்னார் போன்ற பகுதிகளிலும் இடம்பெற்ற பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புபட்டுள்ளமை தெரியவந்துள்ளது.

இதையடுத்து இவருக்கு எதிராக ஏழு பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் யாழ் சிறைச்சாலையிலிருந்து தப்பி ஓடியதாகவும் பொலிஸ் விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளதுடன், குறித்த நபரினால் திருடப்பட்டு வியாபார நிலையங்களில் விற்பனை செய்யப்பட்ட 42 பவுண் நகைகளை மீட்டுள்ளதாகவும் மேலதிக விசாரணைகளின் பின்னர் இன்று வவுனியா மாவட்ட நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளதுடன் இவரின் இந்நடவடிக்கையில், வவுனியா மாவட்ட குற்றத்தடுப்புப்பிரிவு அதிகாரி பொறளை மேதார, பொலிஸ் சார்ஜன் யேசுதாசன் தலைமையில் சென்ற பொலிசார் ஈடுபட்டுள்ளதாகவும் மேலும் தெரிவித்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04
news-image

ஜனாதிபதி நிதியத்துக்கும் அரசாங்கத்துக்கும் வழங்கப்படும் பங்களிப்பை...

2024-03-28 21:24:34
news-image

உண்மை, ஒற்றுமை, நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலத்தை...

2024-03-28 21:40:00
news-image

அதிஉயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் ஏழு...

2024-03-28 21:34:28
news-image

கம்பஹாவில் 5 நகர திட்டங்கள் மே...

2024-03-28 21:23:24
news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59