கண்டி  முல்கம்பளை  பிரதேசத்திலுள்ள வீடு ஒன்றில் தாயும் மகனும் சுறுக்கிட்டு  தற்கொலை செய்துகொண்டுள்ள நிலையில் சடலங்களாக பொலீஸாரால் மீட்கப்பட்டுள்ளனர்.

பொலிஸாருக்கு கிடைத்த தகவல்  ஒன்றின்படி  விசாரணைகளை மேற்கொண்ட கண்டி பொலிஸார் தற்கொலை செய்து கொண்ட  நிலையில் குறித்த இருவரையும் சடலங்களாக மீட்டுள்ளனர்.

இவ்வாறு தற்கொலை செய்துகொண்டுள்ள நிலையில் சடலங்களாக மீட்கப்பட்டவர்கள்  வீ.டீ .லீலாவதி என்ற 69 வயதுடைய  தாயும்   கே.பீ.எஸ். குணரத்ன என்ற 44 வயதுடைய அவரது மகனுமாவார்.

இவர்கள் இருவரும் வீட்டினுள் ஒரே இடத்தில் கழுத்தில்  சுறுக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்தாகவும்  இத் தற் கொலைக்கு காரணம்  தெரியவரவில்லையென பொலிஸார் தெரிவித்தனர்.

இவர்களுள் ஒருவரால் எழுதப்பட்ட கடிதம் ஒன்றையும் பொலிஸார் அவ்விடத்தில் இருந்து மீட்டுள்ளனர். அதில் தாமாகவே தற்கொலை செய்து கொள்வதாக குறிப்பிட்டுள்ளதாகவும் கடித்தின் படி  இரண்டு நாட்களுக்கு முன்  இத் தற்கொலை இடம்பெற்றிருக்கலாம் என்றும்பொலிஸார்  தெரிவிக்கின்றனர்.

சம்பவம் தொடர்பில் கண்டி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.