(எம்.எம்.மின்ஹாஜ், ஆர்.யசி)

பெரும்பான்மையுடன் கூடிய ஸ்திரமான ஆட்சிக்கே நாம் ஆதரவு வழங்குவோம். ஆகவே தேசிய தலைவர்கள் தேவையற்ற தீர்மானங்கள் எடுத்து மக்களின் ஆணையை மீற கூடாது. தேசிய அரசாங்கத்தை கொண்டு செல்லாமல் இடைக்கால அரசாங்கமொன்று நாட்டை நிர்வகிப்பது நல்லதல்ல. அது மக்களின் ஆணையை மீறும் செயலாகும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் சபையில் தெரிவித்தார்.

Image result for ரவூப் ஹக்கீம் virakesari

அத்துடன் புதிய தேர்தல் முறைமைக்கு அங்கீகாரம் வழங்கியமைக்கும் நாம் அனைவரும் பொறுப்பு கூற வேண்டும். ஆகவே மீண்டும் நாம் பழைய தேர்தல் முறைமைக்கு செல்ல வேண்டும் என்பதே எமது கோரிக்கையாகும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

பாராளுமன்றத்தில் இன்று பாராளுமன்ற திருத்தப்பட்ட வரைவு நிலையியற் கட்டளை மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.