பாராளுமன்ற அமர்வை இன்று மாலை 4.00 மணி தொடக்கம் இரவு 7 மணி வரை நடத்துவதென்றும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

நடைமுறை அரசியல் குழப்பங்கள் குறித்து இன்றைய தினமே விவாதம் நடத்தப்பட வேண்டும் என பொது  எதிரணி உறுப்பினர் தினேஷ் குணவர்த்தன தெரிவித்த நிலையில்,  அது குறித்து ஆராய 15  நிமிடம் சபை ஒத்திவைக்கப்பட்டு உடனடியாக சபா­நா­யகர் கரு ஜெய­சூ­ரிய தலை­மையில் கட்சி தலைவர்கள் கூட்டம் தற்போது இடம்பெற்றுவருகின்றது.

இதனையடுத்து, கட்சி தலைவர்கள் கூட்டத்தில் பாராளுமன்ற அமர்வை இன்று மாலை 4.00 மணி தொடக்கம் இரவு 7 மணி வரை நடத்துவதென்றும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

தேசிய அர­சாங்­கத்தில் ஏற்­பட்­டுள்ள முரண்­பா­டான நிலை­மை­யினால் பிர­தமர் பதவி நீக்கம், தனி­யாட்சி கோஷங்கள் மற் றும் கட்­சி­களின் வெவ்­வே­றான குழுக் கூட்­டங்கள் நடத்­தப்­பட்டு தினமும் நாட்டின் அர­சியல் பர­ப­ரப்­பாகும் சூழலில் இன்று பாராளுமன்றம் கூடியது.

எனினும்  நாட்டின் தற்போதைய அரசியல் நெருக்கடி தொடர்பாக விவாதிக்குமாறு மஹிந்த ஆதரவு ஒன்றிணைந்த எதிரணியின் பாராளுமன்ற உறுப்பினர் தினேஸ் குணவர்தன விடுத்த கோரிக்கைக்கு அமைய கட்சி தலைவர்கள் கூட்டம் தற்போது இடம்பெற்றுவருகின்றது.

மீண்டும் கூடியது கட்சி தலைவர் கூட்டம்.!