சென்னை நீதி­மன்­றத்தில் மலை ஒன்றைக் காண­வில்லை என்று வழக்கு தொட­ரப்­பட்­டுள்­ளது.

இது தொடர்பில் மேலும் தெரி­ய­வ­ரு­வ­தா­வது, தேனி ஆட்­சியர் அலு­வ­லகத்தின் பின்னால் இருந்த 250 அடி உயர மலையைக் காண­வில்லை என்று குறித்த வழக்கு தொடரப்பட்­டுள்­ளது.

ஜெப­ம­ணி ­மோ­கன்ராஜ் என்­ப­வரால் தொடரப்­பட்­டுள்ள இவ் வழக்கில் 160 ஏக்­கர் பரப்­ப­ளவில் இருந்த மலை கிராவல் மண்­ணுக்­காக அழிக்­கப்­பட்­டுள்­ள­தா­கவும் இது­போல 500 கோடி­ரூ­பா­வுக்கும் அதி­க­மாக முறை­கே­டுகள் நடை­பெற்­றுள்­ள­தா­கவும் குற்றஞ் சாட்­டப்­பட்­டுள்­ளது.

இது தொடர்பில் ஆட்­சியர் மண்­ணி­யல்­துறை இயக்­கு­ந­ரிடம் 2013ஆம் ஆண்டு முறைப்­பாடு அளித்தும் நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­ட­வில்லை என்று மனு­தாரர் தெரி­வித்­துள்ளார். இவ்வழக்கு விசாரணையின் போது, ஒரு மாதத்­துக்குள் காணாமல் போன மலை குறித்து மனுதாரருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்று நீதிமன்றம் மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டுள்ளது.