சர்ச்­சை­க­ளுக்கு மத்­தியில் இன்று கூடு­கி­றது பாரா­ளு­மன்றம்.!

Published By: Robert

19 Feb, 2018 | 08:43 AM
image

தேசிய அர­சாங்­கத்தில் ஏற்­பட்­டுள்ள முரண்­பா­டான நிலை­மை­யினால் பிர­தமர் பதவி நீக்கம், தனி­யாட்சி கோஷங்கள் மற் றும் கட்­சி­களின் வெவ்­வே­றான குழுக் கூட்­டங்கள் நடத்­தப்­பட்டு தினமும் நாட்டின் அர­சியல் பர­ப­ரப்­பாகும் சூழலில் இன்று திங்­கட்­கி­ழமை பாரா­ளு­மன்றம் கூடு­கின்­றது. 

இதன்­போது பிர­தான அர­சியல் கட்­சிகள் தமது பெரும்­பான்மை பலத்தை நிரூ­பிக்க கூடிய வாய்ப்­புகள் அதி­க­மாக உள்­ளன. அதற்­கான நட­வ­டிக்­கைகள் முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­வ­தாக தக­வல்கள் தெரி­விக்­கின்­றன. அத்­துடன் சில வேளை­களில் கட்சி தாவல்கள் இடம்­பெற கூடும் என்றும் எதிர்­பார்க்­கப்­ப­டு­கின்­றது.

இதன்­கா­ர­ண­மாக சர்ச்­சை­யான நிலைமை இன்­றைய பாரா­ளு­மன்­றத்தில் ஏற்­பட கூடிய சாத்­தியம் உள்­ளது. மேலும் மத்­திய வங்கி பிணை­முறி மோசடி தொடர்­பான விவாதம் நாளையும் நாளை மறு­தி­னமும் இடம்­பெ­ற­வுள்­ளது. எனினும் சில சந்­தர்ப்­பங்­களில்  இன்று பாரா­ளு­மன்ற ஒத்­தி­வைக்­கப்­படும் சாத்­தி­யமும் உள்­ளது. 

உள்­ளூ­ராட்சி மன்ற தேர்தல் பெறு­பே­றுகள் வெளி­வந்த பின்னர் தேசிய அர­சாங்­கத்தில் அங்கம் வகிக்கும் இரு­பி­ர­தான கட்­சி­களும் பிள­வ­டைந்­துள்­ளன. தேசிய அர­சாங்­கத்தை நிறுவ கைச்­சாத்­தி­டப்­பட்ட ஒப்­பந்­தமும் நிறை­வ­டைந்­துள்­ளது. இதனால் பிர­தமர் பத­வி­யிலும் சிக்­க­லான நிலைமை ஏற்­பட்­டுள்­ளது. இதனால் கடந்த வாரம் முழு­வதும் அர­சியல் ரீதி­யாக நாடு பரப்­ப­ரப்­பாக காணப்­பட்­டது. 

இதன்­படி ஐக்­கிய தேசியக் கட்சி ஆரம்­பத்தில் தனி ஆட்சி அமைப்­ப­தாக கூறி விட்டு பின்னர் தேசிய அர­சாங்­கத்­துடன் ஒன்­றி­ணைந்து பய­ணிப்­ப­தாக அறி­வித்­தது. அத­னை­ய­டுத்து தற்­போது கூட்டு எதிர்க்­கட்­சியும் ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியும் ஒன்­றி­ணைந்து தனித்து ஆட்சி அமைக்­க­வுள்­ள­தாக கூறி வரு­கின்­றன.

  ஐக்­கிய தேசியக் கட்­சி­யி­னரே பிர­தமர் பத­வியில் இருந்து வில­கு­மாறு ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­விற்கு அழுத்தம் பிர­யோ­கித்த போதிலும் நான் பிர­தமர் பத­வியில் இருந்து விலக மாட்டேன் என ரணில் விக்­கி­ர­ம­சிங்க கூறி­யுள்ளார். அத்­துடன் சஜித் பிரே­ம­தா­ஸவும் கரு ஜய­சூ­ரி­யவும் பிர­தமர் பதவி பொறுப்­பினை ஏற்க மறுப்பு தெரி­வித்­துள்­ளனர்.

இவ்­வாறு அர­சியல் ரீதி­யாக பரப்­ப­ரப்­பான சூழல் ஏற்­பட்­டுள்ள தரு­வாயில் இன்று திங்­கட்­கி­ழமை  காலை 10 மணிக்கு பாரா­ளு­மன்றம் கூட­வுள்­ளது. உள்­ளூ­ராட்சி மன்ற தேர்தல் பின்னர் கூடும் முத­லா­வது பாரா­ளு­மன்ற  அமர்­வாகும். 

இதன்­படி இன்­றைய பாரா­ளு­மன்ற அமர்வின் போது பல்­வேறு சர்ச்­சைகள் ஏற்­ப­டு­வ­தற்­கான வாய்ப்­புகள் அதி­க­மாக உள்­ளன. இதன்­போது இரு பிர­தான கட்­சிகள் யாருக்கு பெரும்­பான்மை அதி­காரம் உள்­ளது என்­ப­தனை நிரூ­பிப்­ப­தற்கு வாய்ப்­பு­களும் அதி­க­மாக உள்­ளன. இதற்­கான பேச்­சு­வார்த்­தைகள் நடந்த வண்­ண­முள்­ளன. சுதந்­திரக் கட்­சி­யினர் ஒரு சிலரும் ஐக்­கிய தேசியக் கட்­சி­யினர் ஒரு சிலர் சுயா­தீ­ன­மாக செயற்­ப­டு­வ­தற்கு அதிக வாய்ப்­புகள் இருப்­ப­தா­கவே தெரி­கின்­றது. இதன்­பி­ர­காரம் சில வேளை­களில் கட்சி தாவல்­களும் இடம்­பெற கூடும் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கின்­றது. 

அத்­துடன் எதிர்­வரும் 20 மற்றும் 21 ஆம் திக­தி­களில் மத்திய வங்கி பிணைமுறி மோசடி தொடர்பான விவாதமும் இடம்பெறவுள்ளது. எனினும் சில வேளைகளில் இன்று பாராளுமன்றம் ஒத்திவைக்கப்படும் சாத்தியம் உள்ளது. இதன்படி ஐக்கிய தேசியக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் பாராளுமன்றத்தை ஒத்திவைக்க ஜனாதிபதியிடம் அனுமதி கோருமாறு பிரதமரிடம் கேட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04
news-image

ஜனாதிபதி நிதியத்துக்கும் அரசாங்கத்துக்கும் வழங்கப்படும் பங்களிப்பை...

2024-03-28 21:24:34
news-image

உண்மை, ஒற்றுமை, நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலத்தை...

2024-03-28 21:40:00
news-image

அதிஉயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் ஏழு...

2024-03-28 21:34:28
news-image

கம்பஹாவில் 5 நகர திட்டங்கள் மே...

2024-03-28 21:23:24
news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59