தற்போது நாட்டில் இடம்பெற்றுவரும் நல்லாட்சி அரசாங்கத்தை முன்னெடுப்பதே ஜனாதிபதியுடனான இன்றைய சந்திப்பில் எட்டப்பட்ட இறுதித் தீர்மானமென ஐ.தே.க.வின் பாராளுமன்ற குழுக் கூட்டத்தில் பிரதமர் தெரிவித்ததாக அமைச்சர் சுஜீவ சேனசிங்க தெரிவித்தார்.

பிரதமர் பதவி தொடர்பிலும் நல்லாட்சி அரசாங்கத்தின்  எதிர்கால நடடிவக்கைகள் தொடர்பிலும் ஜனாதிபதியுடன் பேசுவதற்காக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் சபாநாயகர் கரு ஜயசூரிய ஆகியோர் இன்று இரவு 6.30 மணியளவில் ஜனாதிபதி மாளிகைக்கு சென்றிருந்தனர்.

இதையடுத்து ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் பேச்சுவார்த்தைகளை முடித்துக்கொண்டு, அலரி மாளிகையில் ஜனாதிபதியுடன் பேசி எடுக்கப்பட்ட தீர்மானங்களை ஐ.தே.க.வின் பாராளுமன்ற குழுக் கூட்டத்தில் பிரதமர் அறிவித்தார்.

இக் கூட்டத்திலேயே பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, நல்லாட்சி அரசாங்கத்தை முன்கொண்டு செல்வதே எமதும் ஜனாதிபதியின் இறுதித் தீர்மானமாக அமைந்ததாக தெரிவித்ததாக அமைச்சர் சுஜீவசேனசிங்க மேலும் தெரிவித்தார்.