பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் சபாநாயகர் கரு ஜயசூரிய ஆகியோர் ஜனாதிபதி இல்லத்திற்கு விஜயம் செய்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

ஜனாதிபதி இல்லத்திற்கு சென்ற குறித்த இருவரும் பிரதமர் பதவி தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபாலசிறிசேனவுடன் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

இன்று இரவு இடம்பெறவிருந்த சந்திப்பே தற்போது ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்று வருவதாக எமது செய்தியாளர் மேலும் தெரிவித்தார்.