இரண்டாவதும் இறுதியுமான இருபதுக்கு -20 போட்டியில் இலங்கை அணி 211 ஓட்டங்கள் என்ற இமாலய இலக்கை பங்களாதேஷ் அணிக்கு நிர்ணயித்துள்ளது.

இரு அணிகளுக்குமிடையிலான 2 போட்டிகள் கொண்ட இருபதுக்கு - 20 போட்டித் தொடரில் இலங்கை அணி முதல் போட்டியில் வெற்றிபெற்று தொடரில் 1-0 என முன்னிலை பெற்றுள்ள நிலையில் இன்று 2 ஆவது போட்டி இடம்பெறுகிறது.

இப் போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற பங்களாதேஷ் அணி இலங்கை அணியை முதலில் துடுப்பெடுத்தாடுமாறு பணித்தது.

இந்நிலையில் முதலாவதாக துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி அதிரடியாக விளையாடி 4 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து 210 ஓட்டங்களைப்பெற்று பங்களாதேஷ் அணிக்கு 210 ஓட்டங்கள் என்ற இமாலய வெற்றி இலக்கை நிர்ணயித்துள்ளது.

இப்போட்டியில் குசல் மெண்டிஸ் 70 ஓட்டங்களையும் குணதிலக 42 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர். 

இப் போட்டியில் பங்களாதேஷ் அணி வெற்றிபெற்று தொடரை சமப்படுத்துமா அல்லது இலங்கை அணி இப் போட்டியில் வெற்றிபெற்று தொடரைக் கைப்பற்றி பங்களாதேஷ் அணிக்கு பழிதீர்க்குமா என்று பொறுத்திருந்து பார்ப்போம்.