நண்பர்களுடன் குளிக்க சென்ற 16 வயதுடைய ராஜா டென்வர் கிருபா என்ற மாணவன் செங்கலடி, களுவான்கேணி கடலில் மூழ்கி பலியாகியுள்ளார்.

இச் சம்பவம் இன்று மதியம் இடம்பெற்றுள்ளது.

சடலம் கண்டெடுக்கப்பட்டு தற்போது செங்கலடி பிரேதச வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

என்போல்ட், லிந்துலை, தலவாக்கலை, நுவரெலியாவை பிறப்பிடமாக கொண்ட இம் மாணவன் க.பொ.த உயர்தரத்தில், தொழில்நுட்ப துறையில் மட்டக்களப்பில் கல்வி கற்பதற்கு , வந்தாறுமூலையிலுள்ள உறவினர் வீட்டில் வசித்து வந்துள்ளார்.

இவரது சடலத்தை அடையாளம் காண பெற்றோர்கள் நுவரெலியாவிலிருந்து, செங்கலடி நோக்கி சென்று கொண்டிருப்பதால் நாளைய தினமே பிரேத பரிசோதனையின் பின்னர் சடலம் பெற்றோரிடம் ஒப்படைக்கப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பான விசாரணைகளை பொலிஸார் மேற்கொள்ளுகின்றமை குறிப்பிடத்தக்கது.