இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகள் மோதும் இரண்டாவதும் இறுதியுமான சர்வதேச இருபதுக்கு இருபது போட்டியில் நாணய சுழற்சியில் பங்களாதேஷ் அணி வெற்றி பெற்றுள்ளது.

இதற்கமைய பங்களாதேஷ் அணியின் தலைவர் முதலில் களத்தடுப்பை தெரிவு செய்துள்ளார்.

பங்­க­ளா­தே­ஷுக்கு கிரிக்கெட் சுற்­றுப்­ப­யணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி ஆரம்­பத்தில் முத்­த­ரப்பு சர்­வ­தேச ஒருநாள் கிரிக்கெட் தொடரில் சம்­பி­ய­னாகி கிண்­ணத்தை வென்­றது. அதன்­பின்னர் பங்­க­ளா­தே­ஷு­ட­னான டெஸ்ட் போட்­டியில் 1 – 0 என்ற கணக்கில் வென்று கிண்­ணத்தை சுவீ­க­ரித்­தது.

இதை­ய­டுத்து சர்­வ­தேச இரு­ப­துக்கு 20 கிண்­ணத்­தையும் வெல்லும் நோக்கில் இன்­றைய தினம் பங்­க­ளாதேஷ் அணியை இலங்கை அணி எதிர்­கொள்­ள வுள்­ளது.

மிர்­பூரில் நடை­பெற்ற முத­லா­வது போட்­டியில் அபார வெற்­றி­யீட்­டிய இலங்கை அணி இப்­போட்­டி­யிலும் வெற்றிப்பெற்று கிண்­ணத்தை கைப்­பற்றும் முனைப்பில் கள­மி­றங்­க­வுள்­ளது.

குசல் பெரே­ரா­வுக்குப் பதி­லாக அணியில் இணைத்­துக்­கொள்­ளப்­பட்ட குசல் மெண்டிஸ் ஆரம்பத் துடுப்­பாட்ட வீர­ராக கள­மி­றங்கி சிறப்­பாகத் துடுப்­பெ­டுத்­தாடி அணியின் வெற்­றிக்கு உறு­து­ணை­யாக இருந்தார். போட்­டியின் இறு­தி­வரை நின்ற தசுன் சானக்க, திசர பெரேரா ஆகி­யோரின் அபார துடுப்­பாட்டம் அணியின் வெற்­றிக்கு பெரிதும் உத­வி­யது.

மேலும், நீண்ட இடை­வெ­ளிக்குப் பின்னர் அணியில் இணைத்துக் கொள்ளப்­பட்ட சக­ல ­து­றை­ வீ­ர­ரான ஜீவன் மெண்டிஸ், தான் வீசிய முத­லா­வது ஓவரின் முத­லா­வது பந்தில் சிறப்­பாகத் துடுப்­பெ­டுத்­தா­டிக்­கொண்­டி­ருந்த செளம்­மிய சர்க்­காரை ஆட்­ட­மி­ழக்கச் செய்தார். மூன்­றா­வது பந்தில் அறி­முக வீர­ரான மற்றும் ஆபிப் ஹொசைனை  ஆட்­ட­மி­ழக்கச் செய்தார். மூன்று பந்­து­களில் இவ்­விரு விக்­கெட்­டு­கள் வீழ்த்­தப்­பட்­டமை பங்­க­ளா­தேஷின் ஓட்­ட­வே­கத்தை குறைத்­தது.  இதன் மூலம் இலங்கை அணியில் தமது தெரிவு சரி­யா­னது என்­பதை ஜீவன் மெண்டிஸ் உணர்த்­தி­யி­ருந்தார்.  

இலங்கை கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்­று­ந­ரான சந்­திக்க  ஹத்­து­ரு­சிங்­கவின் நுணுக்­கங்கள், கள­வி­யூ­கங்கள் மற்றும் திட்­ட­மிடல் போன்­றன தோல்­வியில் துவண்­டு­போ­யி­ருந்த இலங்கை கிரிக்கெட் அணிக்கு புத்­துயிர் கொடுத்­துள்ளமை குறிப்பிடத்தக்கது.