ஆப் ஸ்டோரில் இருந்து வெளியேறும் ட்விட்டர்

18 Feb, 2018 | 02:10 PM
image

ஆப்பிள் மேக் கணினிகளுக்கான ஆப் ஸ்டோரில் இருந்து ட்விட்டர் சேவைக்கான சப்போர்ட் நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேக் கணினிகளில் ட்விட்டர் டெஸ்க்டாப் செயலிக்கான சப்போர்ட் நிறுத்தப்படுவதாக ட்விட்டர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதனால் ஆப்பிள் ஆப் ஸ்டோரில் இருந்து ட்விட்டர் நீக்கப்பட்டுள்ளது. 

மேலும் மேக் கணினிகளுக்கான ட்விட்டர் சப்போர்ட் 30 நாட்களில் நிறைவுறும் என்றும் ட்விட்டர் தெரிவித்துள்ளது. இதனால் மேக் கணினிகளில் ட்விட்டர் சேவையை தொடர்ந்து பயன்படுத்த வாடிக்கையாளர்கள் ட்விட்டெக் (Tweetdeck) போன்ற மூன்றாம் தரப்பு சேவைகளை பயன்படுத்த வேண்டிய கட்டாயத்தில் தள்ளப்படுவர்.

மேக் கணினிகளில் இருந்து ட்விட்டர் நீக்கப்படுவது குறித்த தகவல் வெளியாகும் முன்பு வரை ஆப்பிள் ஆப் ஸ்டோரில் ட்விட்டர் செயலிக்கு வாடிக்கையாளர்கள் வழங்கும் ரிவியூ 1.7/5 என இருந்தது என கூறப்படுகிறது. வாடிக்கையாளர்களிடம் போதிய வரவேற்பு இல்லாததை இது வெளிப்படுத்தி இருக்கிறது.

மேக் செயலியை அப்டேட் செய்வதில் ட்விட்டர் சரியான நுணுக்கங்களை கையாளவில்லை. புதிய அம்சங்கள் அதிகளவு வழங்கப்படாத நிலையில், ஒக்டோம்பர் 2015 இல் வழங்கப்பட்ட மொமண்ட்ஸ் அம்சம் 7 மாதங்கள் கழித்தே மேக் கணினிகளுக்கு வழங்கப்பட்டது என கூறப்படுகிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மனித உரிமைகளை வலுப்படுத்த விரும்பும் இளைஞர்களின்...

2024-03-18 16:04:18
news-image

சமாதானத்தை ஜனநாயகத்தை வலுப்படுத்துவதில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தினையும்...

2024-03-18 11:46:14
news-image

செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தும்போது ஒழுக்கவியல் சார்ந்த...

2024-03-15 15:43:14
news-image

டிக்டொக்கை பின்னுக்குத் தள்ளிய இன்ஸ்டாகிராம்

2024-03-11 10:13:06
news-image

மனித மூளையில் ‘சிப்’ ; எலான்...

2024-01-30 13:16:57
news-image

“மூன் ஸ்னைப்பர்” வெற்றிகரமாக தரையிறங்கியது :...

2024-01-19 21:59:46
news-image

எதிர்காலத்தை ஆளப்போகும் செயற்கைநுண்ணறிவு

2023-11-22 15:47:57
news-image

வட்ஸ் அப்பில் ஒரே நேரத்தில் இரண்டு...

2023-10-21 12:02:07
news-image

ஸ்னாப் செட்டின் புதிய செயற்கை நுண்ணறிவு...

2023-10-07 11:02:07
news-image

கூகுளுக்கு இன்று வயது 25

2023-09-27 10:36:57
news-image

ஏகத்துவத்தை நோக்கி தொழில்நுட்பத்தில் வேகமாக மாற்றமுறும் ...

2023-09-22 18:33:26
news-image

சமூக வழிகாட்டுதல்கள் பற்றிய விழிப்புணர்வை இலங்கையில்...

2023-08-28 20:48:26