சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்களின் பாதங்களில் இருக்கும் நரம்புகள் வலுவிழந்து காணப்படும். அத்துடன் அங்கு இரத்த ஓட்டமும் சீராக இல்லாததால் பாதங்களில் உணர்வுகள் என்பது இயல்பை விட மிகவும் குறைவான நிலையில் இருக்கும். இதனால் பாதங்களில் அடிப்பட்டாலோ அல்லது ஏதேனும் பாதிப்பு உருவானாலோ அதன் விளைவுகள் எதுவும் அவர்களால் உணரமுடிவதில்லை. மேலும் அவர்கள் இதனால் ஏற்படும் விளைவுகளையும் அறிவதில்லை. இதன் காரணமாக பாதங்களில் உள்ள எலும்புகள் பாதிக்கப்பட்டு உடைந்துவிடக்கூடிய சூழல் உருவாகிறது. இதனால் காலை அகற்றவேண்டிய நிலை உருவாகிறது.

இதனை தடுக்கவேண்டும் என்றால் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் தினமும் தங்களின் பாதங்களைக் கண்காணிக்கவேண்டும். பாதங்களை தண்ணீரைக் கொண்டு சுத்தப்படுத்திக் கொள்ளவேண்டும். பாதிப்புகள் ஏதேனும் இருக்கிறதா என்பதையும் சோதித்துக் கொண்டேயிருக்கவேண்டும். பாதிப்புகள் இருந்தால் உடனடியாக மருத்துவ ஆலோசனையும், சிகிச்சையையும் எடுத்துக் கொள்ளவேண்டும். பாதங்களை பாதுகாக்க பிரத்யேகமான காலணிகளை அணிய வேண்டும். சூடான தரையில் நடப்பதை முற்றாக தவிர்க்கவேண்டும். சமதளமற்ற பாதையில் நடப்பதையும் தவிர்க்கவேண்டும்.

டொக்டர் பார்த்திபன்

தொகுப்பு அனுஷா.